கங்குவா வெற்றி விழா.. உலக அளவிலிருந்து வருவார்களாம்.. ஞானவேல் ராஜா உச்சக்கட்ட நம்பிக்கை
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் ரிலீஸானதால் அதற்கு மரியாதை கொடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா தெரிவித்திருந்தார். அதன்படி படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகிய சூர்யா; சிவாவின் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். சிவா இயக்கிய அண்ணாத்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக சூர்யாவை வைத்தும் சிவா செய்துவிடுவாரோ என்றே ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனாலும் படத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஒருபக்கம் இருக்கவும் செய்தது. அதனை படத்தின் ட்ரெய்லரும் ஓரளவு உறுதி செய்தது.

இரண்டு பாகங்கள் கங்குவா: கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.
ரஜினிக்கு மரியாதை: இப்படி எக்கச்சக்க ஹைப்போடு கங்குவாவுக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படம் ரிலீஸானதால்; மூத்தவர் ரஜினிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா ஒரு விழாவில் தெரிவித்திருந்தார். அதன்படி படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகிறது.
சூடுபிடிக்கும் ப்ரோமோஷன்: படம் ரிலீஸாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அதில் சூர்யா மும்முரமாக கலந்துகொண்டுள்ளார். முக்கியமாக மும்பையில் நடக்கும் ப்ரோமோஷன் பணிகளில் சூர்யா கலந்துகொண்டு பல விஷயங்களை பேசிவருகிறார். இதற்கிடையே இந்தப் படம் மொத்தம் முப்பது மொழிகளில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. முப்பது மொழிகளில் படம் ரிலீஸாவதும் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
ஞானவேல் ராஜாவின் நம்பிக்கை: இதற்கிடையே இந்தப் படம் கண்டிப்பாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில் அவர், 'கங்குவா படத்தின் வெற்றி விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். உலக அளவிலிருந்து விநியோகஸ்தர்களை அழைத்து அந்த விழா நடக்கும். கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இருந்த பாஸினை வைத்துக்கொண்டே ரசிகர்கள் வெற்றி விழாவுக்கும் வரலாம்'' என கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











