Thangalaan - தங்கலானை ஆஸ்கருக்கு அனுப்பும் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன.. ஞானவேல் ராஜா பேட்டி

சென்னை: Thanagalaan (தங்கலான்) தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் வேலை நடப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார்.

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் விமர்சனத்தை தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்கலான் படத்தில் கமிட்டானார் இரஞ்சித்.

Gnanavel Raja talks about Thanagalaan Movies Latest Work

விக்ரம் நடிக்கும் தங்கலான்: தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் சியானின் ரசிகர்கள்.

ஷூட்டிங் ஓவர்: ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படமானது 2024 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

செம டீசர்: இந்த சூழலில் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் வாயடைத்து போயிருக்கின்றனர். வசனம் எதுவும் இல்லாமல் காட்சிகள் மூலமே பா.இரஞ்சித் மிரட்டிவிட்டார். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என ரசிகர்கள் சொல்லிவருகின்றனர்.

ஆஸ்கருக்கு: இதற்கிடையே படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்தில் பா.இரஞ்சித் மற்றும் படக்குழுவினர் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து உண்மை நிலவரம் எத்ருவும் தெரியாமல் இருந்தது.இந்நிலையில் அதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தங்கலான் இயக்குநர், விக்ரம், படக்குழுவினர் சொல்வதை எல்லாம் கேட்கும்போது தங்கலான் உலகத்தரத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் ஆஸ்கருக்கு அனுப்பக்கூடிய தகுதி இந்தப் படத்துக்கு இருக்கிறது. அதற்கான வேலைகள் இப்போது போய்க்கொண்டிருக்கின்றன. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இப்போது 6 படங்களின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதத்துக்கு எனக்கு 30 கோடி ரூபாய் தேவை. அதாவது ஒரு நாளுக்கு எனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். ஆனால் அதை நான் என்ஜாய் செய்துகொண்டிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X