கோவா ஷூட்டிங்.. வைபவ் அப்படி செய்தார்.. பிரேம்ஜி கிஸ் அடித்தார்.. நடிகர் ரவீந்திரன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களை இயக்கியிருக்கும் அவர்; அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் அவர் இயக்கிய கோவா படத்தில் நடித்த ரவீந்திரன் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தையே ஜாலியான ஜானரில் எடுத்து ஹிட் கொடுத்த அவர் அடுத்தடுத்து இயக்கிய படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றன. அதிலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைத்தது. இதன் காரணமாக தொடர்ந்து பெரிய ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது.
சறுக்கிய வெங்கட் பிரபு: அதன்படி சூர்யாவை வைத்து மாசு என்கிற மாசிலாமணி, கார்த்தியை வைத்து பிரியாணி, சிம்புவை வைத்து மாநாடு, விஜய்யை வைத்து கோட் ஆகிய படங்களை இயக்கினார். அவற்றில் மாசு, பிரியாணி, கோட் ஆகிய் அமூன்று படங்களும் படுதோல்வியை சந்தித்தன. அதேசமயம் சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. மேலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது.

அடுத்த படம்: இப்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் கோட் பட வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார். எஸ்கேவுடன் இணையும் படமும் அவரது கரியரில் பெரிய பெயரை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட்டின் படங்கள் என்றாலே செம ஜாலியாக இருக்கும் என்பதுதான் எதார்த்தம். அப்படித்தான் கோவா திரைப்படமும் அமைந்தது.
கோவாவுக்கும் நல்ல பெயர்: கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான கோவா அப்போதைக்கு சுமாரான வரவேற்பைதான் பெற்றது. ஆனால் இப்போது பலராலும் ஜாலியாக ரசித்து பார்க்கப்படுகிறது. அப்படத்தில் நடிகர் ரவீந்திரனை மொத்தம் 12 கெட்டப்புகள் போட வைத்து அலப்பறையை கூட்டியிருப்பார் வெங்கட். அது பெரிய அளவில் ரீச் ஆனது. இந்நிலையில் நடிகர் ரவீந்திரன் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
ரவீந்திரன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கோவா படத்தில் 12 ரோல்கள் என்று கோவாவுக்கு போன பிறகுதான் எனக்கு தெரியும். அதில் ஒரு லேடி கெட்டப்பும் போட்டிருப்பேன். அந்த கெட்டப்புக்காக எனது உடல் முழுவதும் ஷேவ் செய்துவிட்டார்கள். கவுனும் போட்டுவிட்டார்கள். வைபவ் வந்து லேசாக தடவிட்டு செல்வார். பிரேம்ஜி வந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு போவார். அங்கு ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள் எல்லாம் என்னை உண்மையில் ஒரு பெண்ணாகவே நினைத்துவிட்டார்கள். அனைத்தும் முடிந்து காஸ்ட்யூம் மாற்றுகையில்தான் நான் ஆண் என்றே அவர்களுக்கு தெரிந்தது.
மொத்தம் நான்கு படங்கள்: வெங்கட் பிரபு இயக்கத்தில் மொத்தம் நான் நான்கு படங்கள் செய்துவிட்டேன். இடையில் மலையாளத்தில் நான் பிஸியாகிவிட்டேன். அதேபோல் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தேன். நயனுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடித்திருக்கிறேன். நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மறந்துவிடுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











