»   »  மஜித் மஜிதியின் பியான்ட் த க்ளௌட் படத்துடன் கோவா திரைப்பட விழா ஆரம்பம்! #IFFIGoa

மஜித் மஜிதியின் பியான்ட் த க்ளௌட் படத்துடன் கோவா திரைப்பட விழா ஆரம்பம்! #IFFIGoa

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா: மஜித் மஜிதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியான்ட் தி க்ளௌட் படத்துடன் இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது.

புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் இந்தியப் படம் பியான்ட் த க்ளௌட். இஷான் கட்டர், மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

Goa International Film Festival begins wiyth Majid Majidhi's film

இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் முதல் நாளே திரையிட தேர்வானது. நேற்று விழா தொடங்கியதுமே பியான்ட் தி க்ளவுட் படம் திரையிடப்பட்டது.

படம் பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டினர். படத்தை இந்த விழாவின் முதல் நாளே திரையிட்டதற்கு திரைப்பட விழாக்குழு மஜித் மஜிதி, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மஜித் மஜிதி, ஷாரூக்கான், ஏ ஆர் ரஹ்மான், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நடிகர்கள் நானா படேகர், ஸ்ரீதேவி, அனுபம் கெர் என ஏராளமான பிரபலங்கள் இந்த விழாவில் துவக்க நாளில் பங்கேற்றனர்.

நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 82 நாடுகளைச் சேர்ந்த 195 படங்கள் கலந்து கொள்கின்றன.

English summary
Goa International Film Festival has begin with Majid Majidhi's film Beyond The Cloud
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil