கோவா படத்தின் தோல்வி.. எனக்கு கற்றுத்தந்த மறக்கமுடியாத பாடம்!
சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே கலகலப்புக்கும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது
வழக்கமான காமெடி பாணியில் இருந்து சற்று விலகி டைம் லூப் பாணியில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் கோவா படத்தின் தோல்வி எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது என வெங்கட் பிரபு ஓபனாக பேசினார்.

ஹீரோவாக சில படங்களில்
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் துணை நடிகராக வலம் வந்த வெங்கட் பிரபுவுக்கு 600028 படம் மிகப் பெரிய வெற்றி படமாக இருந்தது.

வெற்றிகரமாக 100 நாள்
அறிமுகப் படத்திலேயே சிக்சர் அடித்த வெங்கட் பிரபு இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை வைத்து கலகலப்பான கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கியது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. 100 நாள் வரை வெற்றிகரமாக ஓடிய இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து கலந்து கொண்டது இந்த படத்தின் வெற்றிக்கு தனிச் சிறப்பாக அமைந்தது.

மூன்றாவது படம் கோவா
சென்னை 600028 வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை கொடுத்த வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கிய படம் கோவா. பிரேம்ஜி, வைபவ் என மூன்று ஹீரோக்கள் இதில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இப்படத்தை தயாரித்திருந்தார்.

தோல்வி பாடம் கற்று தந்தது
இளமை துள்ளலுடன் கலர்ஃபுல்லான காமெடி கதை களத்தில் வெளியான கோவா திரைப்படமும் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருந்த வெங்கட் பிரபுவுக்கு இந்த படம் மிகப்பெரிய சறுக்கலை கொடுத்தது. இளைஞர்கள் மத்தியில் கோவா நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களை இப்படம் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . பாக்ஸ் ஆபீசிலும் இந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கோவா படத்தின் தோல்வி தனக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது என வெங்கட் பிரபு சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் ஓபனாக பேசினார்.

படம் ஓடவில்லை
மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது முதல் படம் சென்னை 28 எனக்கு எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது அதைத் தொடர்ந்து இயக்கிய சரோஜாவும் எனக்கு வெற்றி படமாக அமைந்தது. இரண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டோம் இனிமே நாம தான் எல்லாம் மக்களுக்கு நம்ம எடுக்கிற எல்லா படமும் பிடிக்கிறது. இனி நம்ம இயக்கும் படமெல்லாம் மக்களுக்கு பிடித்து விடும் என்ற மிதப்பில் கோவா படத்தை இயக்கினேன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சினிமாவை விட யாரும் இங்க பெரிய ஆள் இல்லை
சிலர் நல்லா இருக்கு என்று சொல்வார்கள் சிலபேர் நல்லா இல்லை என்று சொல்லுவார்கள் கலவையான விமர்சனங்களை முந்தைய படங்களை போல பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை செய்யவில்லை. அப்போதுதான் எனக்கு புரிந்தது சினிமாவை யாரும் கண்ட்ரோல் செய்ய முடியாது.. சினிமாவை விட நீ பெரிய ஆள் கிடையாது... சினிமா தான் உன்ன கண்ட்ரோல் பண்ணும். என கோவா தோல்வி கற்றுக்கொடுத்த பாடம் குறித்து வெங்கட் பிரபு ஓபனாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











