தலையை மட்டும் தூக்கிடாத.. அமல் டேவிஸ் நல்லா ஆடுறாரே.. ‘கோட்’ 3வது சிங்கிளை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கோட் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஸ்பார்க் பாடல் தற்போது வெளியானது. அந்த பாடலில் நடிகர் விஜய்யின் டீ ஏஜிங் லுக்கை பார்த்த ரசிகர்கள் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மேலும், பிரேமலு படத்தில் நண்பன் கதாபாத்திரமான அமல் டேவிஸ் போலவே விஜய் உள்ளார் என்கிற கமெண்ட்டுகளையும் அனிமேஷன் விஜய் லுக் படுமோசம் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

வெங்கட் பிரபு முடிந்தவரை விஜய்யின் டீ ஏஜிங் தோற்றத்தை ரசிகர்களுக்கு காட்டாமலே இருந்திருக்கலாம் என்றும் ஒரு சில காட்சிகளை மட்டும் காட்டி படத்தின் சோலியையே முடித்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.
கோட் 3வது சிங்கிள்: யுவன் சங்கர் ராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய ஸ்பார்க் பாடல் தற்போது வெளியானது. அந்த பாடலின் லிரிக் வீடியோவை சிறப்பாகவே உருவாக்கியுள்ளனர். முடிந்த வரை டீ ஏஜிங் விஜய்யை காட்டாமல் வெறும் போட்டோக்களில் மட்டுமே காட்டி எஸ்கேப் ஆகியுள்ள யுக்தி சிறப்பான ஒன்று தான். ட்ரோல்களை விடுத்து பாடலை நன்றாகவே ரசிக்க முடிகிறது. யுவன் சங்கர் ராஜாவின் குரலில் வெளியான இந்த பாடல் இதுவரை வெளியான கோட் பாடல்களிலேயே சார்ட்பஸ்டர் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹேட்டர்களுக்கும் விருந்து: வெங்கட் பிரபு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என விஜய்யை பலியாடாகவே ஆக்கி விட்டார் என அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். விஜய்யின் டீ ஏஜிங் லுக் படு மோசமாக இருப்பதாகவும் வெங்கட் பிரபுவின் ஹீரோ ஒரு அனிமேஷன் பொம்மையா என கிண்டல் செய்து வருகின்றனர்.
தலையை மட்டும் தூக்காத: ஸ்பார்க் பாடலில் விஜய் நடனமாடும் போர்ஷனை காட்டும்போது அவர் தலை குனிந்தபடியே நடனமாடும் காட்சிகளை மட்டும் காட்டியுள்ளனர். ஒரே ஒரு செகண்ட் மட்டும் விஜய்யின் முகத்தைக் காட்ட டீ ஏஜிங் சரியில்லை என்றும் தலையை மட்டும் தூக்கிடாத என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
அமல் டேவிஸ் தான்: அர்ச்சனா கல்பாத்தி அக்காவை ஏமாற்றி வெங்கட் பிரபு ஹாலிவுட்டுக்கு எல்லாம் சென்று டீ ஏஜிங்கிற்கு பல கோடி செலவு செய்யாமல் கேரளாவில் இருந்து அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீத் பிரதாப்பை வயதான விஜய்க்கு மகனாக நடிக்க வைத்திருந்தால் பல கோடி மிச்சமாகி இருக்கும், ஐடியா இல்லாத பசங்க என விவேக் டெம்ப்ளேட்டை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஃபார் மை பாய் ஏகே: வெங்கட் பிரபு கோட் படம் முடிந்து அஜித்தை சந்திக்கும் போதே தெரியும். விஜய்யை காலி பண்ணவே இந்த படத்தை எடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஃபார் மை பாய் ஏகே என ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மீமையும் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். கோட் படத்தின் நிலைமை என்ன ஆகும் என்கிற கேள்வியும் டீ ஏஜிங் பண்ணாமலே விஜய் ஷூட்டிங்கிலேயே யங்கா தானே இருந்தார் அப்படியே நடிக்க வைத்திருக்கலாமே என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











