GOAT: டீ ஏஜிங் விஜய் எப்படி இருக்காரு?.. பட்டாசா இருக்கே ‘ஸ்பார்க்’ பாடல்.. மீனாட்சி சவுத்ரி செம!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் 3வது சிங்கிளான 'ஸ்பார்க்’ பாடல் இன்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே வெளியான 'விசில் போடு’ மற்றும் 'சின்ன சின்னக் கண்கள்’ பாடல்களை நடிகர் விஜய்யே பாடியிருந்தார். அந்த இரு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், 3வது பாடல் தற்போது வெளியானது.

GOAT Vijay Meenakshi Chaudhary

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பிகில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது போலவே கோட் படமும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான 2 பாடல்களும் அப்பா விஜய்க்காக உருவாக்கப்பட்ட பாடல் என்கிற நிலையில், மகன் விஜய்யின் பாடலாக இந்த ஸ்பார்க் பாடல் வெளியாகியுள்ளது.

டீ ஏஜிங்: கோட் படத்தில் நடிகர் விஜய்யை இளமையாகவும், வயதான தோற்றத்திலும் காட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இளம் வயது விஜய்க்காக டீ ஏஜிங் செய்து எடுக்கப்பட்ட நிலையில், அந்த விஜய் நடனமாடியுள்ள பாடல் எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்கிற அச்சம் எழுந்து வந்த நிலையில், சூப்பராகவே டீ ஏஜிங் காட்சிகளை படமாக்கியுள்ளார் வெங்கட் பிரபு என்றே தெரிகிறது. விஜய்யின் லுக் குறித்த ட்ரோல்களை அவரது ஹேட்டர்கள் வழக்கம் போல கிளப்பி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

3வது சிங்கிள்: மதன் கார்கி வரிகளில் விஜய் குரலில் வெளியான விசில் போடு பாடல் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது. விஜய் மற்றும் மறைந்த பவதாரிணியின் ஏஐ வாய்ஸ் பயன்படுத்தி 2வது பாடலை உருவாக்கிய யுவன் சங்கர் ராஜா. விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடனமாடும் ஸ்பார்க் பாடலையும் வித்தியாசமான இசையுடன் இளைஞர்களை துள்ளல் ஆட்டம் போட வைக்கும் விதமாக கொடுத்திருக்கிறார்.

பாட்டு எப்படி இருக்கு?: மதன் கார்கி எழுதிய 'விசில் போடு’ பாடல் வரிகளை விட கங்கை அமரன் எழுதியுள்ள 'அவ கண்ணால பார்த்தா” பாடல் வரிகள் அட்டகாசமாகவும் யுவன் சங்கர் ராஜா குரலில் முதல் முறை கேட்டவுடனே பாடத்தூண்டும் வகையிலும் சிறப்பாகவே உள்ளது. ஆனால், பாடலில் வரும் இளம் விஜய் போர்ஷன் மட்டுமே என்ன செய்யப் போகிறது என்கிற அச்சத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி செம டான்ஸ் போட்டுள்ளதாகவும் படு கிளாமர் உடையில் நடனமாடியிருப்பதும் இளைஞர்களுக்கான ட்ரீட்டாகவே இருக்கும் என தெரிகிறது.

போட்டோவிலேயே முடிச்சிட்டாங்க: விஜய் நடனமாடும் காட்சியில் ஒரு சில நொடிகள் மட்டுமே காட்டியுள்ளனர். அதிகம் காட்டினால் படத்திற்கு ஆபத்தாகி விடுமோ என நினைத்து விட்டார்களா என தெரியவில்லை. அதிகளவிலான காட்சிகளை வெறும் போட்டோக்களாகவே கடந்து சென்றது லிரிக் வீடியோ எடிட்டரின் புத்திசாலித்தனமாகவே தெரிகிறது. தியேட்டரில் டீ ஏஜிங் விஜய்க்கான காரணம் வலுவாக இருக்க வேண்டும் மற்றும் திரைக்கதை விறுவிறுப்பாக சென்றால் மட்டுமே கோட் படம் தப்பிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோட் 3வது சிங்கிளான ஸ்பார்க் பாடல் லிரிக் வீடியோவாக நன்றாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X