2024ல் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் காட் ஃபாதர் இவர்தான்.. முதல் 2 இடத்திலும் விஜய் படங்களா?

சென்னை: 2024ம் ஆண்டு கண்ணை மூடித் திறப்பதற்குள் ஓடிப்போச்சேன்னு தான் நினைக்கத் தோன்றுகிறது. டிசம்பர் மாதம் இன்னும் 20 நாட்களில் முடிந்து அடுத்து 2025ம் ஆண்டு துவங்கப் போகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டு தியேட்டர்களில் அதிக வசூல் செய்த டாப் 3 படங்கள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் தியேட்டர் ஓனர்கள் நடத்திய ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பிரபல தியேட்டர் ஓனர்கள் பேசியுள்ளனர்.

இந்த ஆண்டு ஓவர் பில்டப்புடன் வெளியான சூர்யாவின் கங்குவா படத்தை ரோஸ்ட் செய்யும் ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்ச்சி மாறினாலும் அதை தாண்டி கடைசியாக 2024ம் ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலையும் தியேட்டர் ஓனர்கள் கூறியுள்ளனர்.

year ender 2024 goat ghilli 2024

நடிகர் விஜய் நடித்த 2 படங்கள் சில தியேட்டர்களில் முதல் 2 இடங்களை பிடித்திருப்பது தான் இதில் ரொம்பவே ஆச்சர்யமான விஷயமாக மாறியுள்ளது.

முதலிடத்தில் கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன் உள்ளிட்ட பலர் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தான் தமிழ்நாட்டில் அதிக வசூலை பாக்ஸ் ஆபிஸில் இந்தாண்டு அள்ளியிருப்பதாக அனைத்து தியேட்டர் ஓனர்களும் கூறியுள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 2வது இடத்திலும் விஜய்யின் படம் தான் அதிக வசூலை குவித்துள்ளது.

2வது இடத்தில் கில்லி: தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்த கில்லி படம் இந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் மலையாளப் படங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன என்கிற நிலையில், கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் வெளியாகி 25 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது. கமலா சினிமாஸ் மற்றும் ராக்கி தியேட்டரில் இந்த ஆண்டு வசூலில் 2வது இடத்தை கில்லி தான் பிடித்துள்ளதாம்.

அமரன் படம் டாப்: ரஜினிகாந்தின் வேட்டையன், கமல்ஹாசனின் இந்தியன் 2ம் தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் 2வது இடத்தை பல திரையரங்குகளில் அமரன் படம் தான் பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் கோட் படமும் 2வது இடத்தில் அமரன் படமும் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தியேட்டர் ஓனர்களே கூறியுள்ளனர்.

கோட் படத்தை முந்தும் அமரன்: அதிலும், வரதராஜா தியேட்டரில் கோட் படத்துக்கும் அமரன் படத்துக்கும் சின்ன இடைவெளி தான் என்றும் அமரன் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த தியேட்டரில் கோட் வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் படம் முந்துவதற்கு சாத்தியம் அதிகம் இருப்பதாக அந்த தியேட்டர் ஓனர் கூறியுள்ளார்.

கோட் வசூல் குறைய காரணம்: லியோ படம் அளவுக்கு கோட் படமும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்றும் அந்த படத்திற்கான புரமோஷன் சரியாக இல்லை என்றும் கடைசி நேரத்தில் பிரேம்ஜி மற்றும் வைபவ் கொடுத்த ஹைப் தான் ஓரளவுக்கு வசூல் வரக் காரணமாக அமைந்தது என வெற்றி தியேட்டர் ஓனர் கூறியுள்ளார். ஓவர் ஹைப்பாக போனதால் தான் கங்குவா திரைப்படம் ஓடவில்லை என்றும் ஹைப்பை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு சரியாக கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மஞ்சுமெல் பாய்ஸ்: மூன்றாவது இடத்தில் மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் இடம் பிடித்திருப்பதாக பல தியேட்டர்கள் கூறியுள்ளன. சில தியேட்டர்களில் மூன்றாவது இடத்தை வேறு சில படங்களும் பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X