கோட் முதல் தேவாரா வரை செப்டம்பரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்.. வசூலை அள்ளும் படம் எது?
சென்னை: கடந்த மாதம் பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான், டிமான்டி காலனி 2, மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், டிமான்டி காலனி 2 , வாழை படம் நல்ல வசூலை பெற்றன. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.
கோட்: விஜய்யின் 68வது படமான கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டுவிதமான ரோலில் நடித்துள்ளார். மேலும், விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, வைபவ் என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி உலகளவில் வெளியாகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் பெரிய ஆவலில் உள்ளனர். தமிழகம் மற்றும் கேரளத்தில் முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க பலரும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட் வாங்கி குவித்து வருகின்றனர்.

35 Chinna Kathai Kaadu: அறிமுக இயக்குனர் நந்த கிஷோர் எமானி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 35 சின்ன கதை காடு. தமிழ்,தெலுங்கு, மலையாளத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில், நிவேதா தாமஸ், பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கவுதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில், ஹோம்மேக்கராக நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.
தேவாரா: இயக்குநர் கொரட்டலா சிவா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் தேவாரா. இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் செப்டம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் ஜான்வி கவர்ச்சி மழை பொழியும் காதல் பாடலான 'பத்த வைக்கும்' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் தமிழ் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

மெய்யழகன்: இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியும், அர்விந்த் சாமியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லப்பர் பந்து: கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் லப்பர் பந்து. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாகவும், சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 20ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

The Buckingham Murders: நடிகை கரீனா கபூர் துப்பறியும் சார்ஜென்ட் ஜஸ்மீத் பாம்ராவாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். அசீம் அரோரா, காஷ்யப் கபூர் மற்றும் ராகவ் ராஜ் காக்கர் ஆகியோர் இப்படத்தை எழுதியுள்ளனர். தனது குழந்தையை இழந்த கரீனா கபூர், பக்கிங்ஹாம்ஷயரில் சிறுவனின் கொலை குறித்து விசாரிக்கிறார். அந்த விசாரணையில், அனைவரும் சந்தேகத்திற்குரியவர்களாக மாறி, அடுத்தடுத்த மர்ம முடிச்சுகளுடன் கதை நகர்கிறது. தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ் செப்டம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

செக்டார் 36: விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் தீபக் டோப்ரியால் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள கிரைம் த்ரில்லர் திரைப்படம் தான் செக்டர் 36. இப்படம் செப்டம்பர் 13ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆதித்யா நிம்பல்கரின் இயக்குனராக அறிமுகமாகி உள்ள இப்படம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தை தினேஷ் விஜனின் மேடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

யுத்ரா: ஆக்ஷன் படமான இப்படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, மாளவிகா மோகனன், ராகவ் ஜூயல் ஆகியோர் நடித்துள்ளனர். ரித்தேஷ் சித்வானி, ஃபர்ஹான் அக்தர் மற்றும் சுதா அனுக்தா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரவி உத்யவர் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











