Venkat Prabhu-GOAT இயக்குநர் வெங்கட் பிரபுவை காணவில்லை..பரபரப்பு கிளப்பிய கிச்சா சுதீப்..நடந்தது தெரியுமா?

சென்னை: வெங்கட் பிரபு கோலிவுட்டில் இப்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்த அவர் தற்போது GOAT படத்தை இயக்கிவருகிறார். பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவருகிறது.

கங்கை அமரனின் மகன் மூத்த மகன் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நட்பு, கிரிக்கெட் ஆகியவைகளை மையமாக வைத்து படு ஜாலியாக அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அவர். படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக முதல் பட இயக்குநர் போன்றே அவர் பணியாற்றவில்லை. அனுபவம் மிக்க இயக்குநர் போல் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

GOAT Director Venkat Prabhu Disappeared Kichcha sudeep Tweet

அடுத்தடுத்த ஹிட்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சரோஜா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக த்ரில்லர் ஜானரிலும் தான் கைதேர்ந்தவர் என்பதை வெங்கட் பிரபு அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் தோல்வியடைந்தது. படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் படம் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது என்றும்; ரொம்பவே கேஷுவலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.

மெகா ஹிட்: வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் அதிரிபுதிரி வரவேற்பை பெற்றது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.

GOAT:மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஷூட்டிங் நிறுத்தம்: படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ஆனால் இளையராஜாவின் மகளும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி உயிரிழந்ததால் இப்போது படத்தில் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படமும், கிச்சா சுதீப்புடன் ஒரு படமும் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த இரண்டு படங்களின் பணிகள் தொடங்கவில்லை. மாறாக GOAT படத்துக்கு வந்துவிட்டார்.

வெங்கட் பிரபுவை காணவில்லை: இந்நிலையில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'நீங்களும் வெங்கட் பிரபுவும் இணையும் படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கிச்சா சுதீப், 'வெங்கட் பிரபுவை காணவில்லை. அடுத்ததாக அனூப் பண்டாரியுடன் இணைந்து பணியாற்றும் திட்டம் இருக்கிறது' என்றார்.

நடந்தது தெரியுமா?: கிச்சாவின் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டானது. அதேசமயம் பவதாரிணி உயிரிழந்திருக்கும் செய்தி கிச்சா சுதீப்புக்கு எப்படி தெரியாமல் இருக்கும். நிலைமை இப்படி இருக்க அவர் எதற்காக இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நாகரீகம் இல்லை என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கமெண்ட்ஸ்களை பதிவிட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X