ஓவர் தலையீடு?.. மாசு பட தோல்விக்கு சூர்யா காரணமா?.. வெங்கட் பிரபு பேச்சால் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இப்போது விஜய்யை வைத்து அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் வெங்கட் பிரபு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி கொடுத்த ஒரு பேட்டியில் அவர் பேசிய விஷயம் புதிய பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கம் என்றாலே அந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒருசில படங்களே தோல்வியடைந்திருக்கின்றன. முக்கியமாக தான் இயக்கும் படங்களில் பக்காவான ட்விஸ்ட், ஜாலியான சீன்கள் என முழு கமர்ஷியல் பேக்கேஜை வைத்துவிடுவார். ஆனால் அவர் கடைசியாக இயக்கிய கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் அதற்கு முன்னதாக அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

goat vijay venkat prabhu

GOAT வெங்கட் பிரபு: கஸ்டடி தோல்விக்கு பிறகு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட். ஏஜிஎஸ் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மல்டி ஸ்டாரர் படமாக இது உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வெங்கட் பிரபு உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

செப்டம்பர் 5ல் ரிலீஸ்: படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி ஜோராக நடந்துவருகிறது. தமிழ்நாடெங்கும் பல திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகள் இப்போதே புக் செய்யப்பட்டுவிட்டன. எனவே கண்டிப்பாக GOAT படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது ஏற்படுத்தியிருக்கிறது.

பட ப்ரோமோஷன்: விஜய்க்கும் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கின. எனவே GOAT படத்தை ரொம்பவே அவரும் நம்பியிருக்கிறார். பட ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்துவருகிறார்கள்.

வெங்கட் பிரபு பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு வெங்க்ட பிரபு அளித்த பேட்டி ஒன்றில், "சூர்யாவை வைத்து நான் இயக்கிய மாசு படத்தை வேறு மாதிரிதான் ட்ரீட் செய்திருந்தேன். அதாவது அதை முழுக்க முழுக்க ஹியூமர் சப்ஜெக்ட்டாகத்தான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் சூர்யாவின் தரப்போ என்னிடம், நீங்கள் மங்காத்தா மாதிரி ஒரு மாஸ் படம் பண்ணிருக்கீங்க. இதிலும் அந்த எலிமெண்ட்ஸ் வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் கொஞ்சம் படத்தின் கதையில் மாற்றினேன்.

முக்கியமாக பிளாஷ்பேக் போர்ஷனை 80கள் காலகட்டத்தில் நடப்பது போன்றுதான் யோசித்து வைத்திருந்தேன். அதற்கு தகுந்தவாறுதான் இசை வேண்டும் என்று யுவன் ஷங்கர் ராஜாவிடமும் சொல்லியிருந்தேன். ஆனால் சில மாற்றங்களை செய்ய வேண்டியதாயிற்று. சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட படங்களை எப்படி நான் யோசித்திருந்தேனோ அப்படியே எடுத்தேன். ஆனால் மாசு என்கிற மாசிலாமணியில் நான் கொஞ்சம் மாற்றங்கள் செய்ததால் ஒர்க் அவுட் ஆகவில்லை" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ மாசு தோல்விக்கு அந்தக் கதையில் சூர்யா ஓவராக தலையிட்டதுதான் காரணமோ என்று கேள்வி எழுப்பி புதிய பஞ்சாயத்தை சமூக வலைதளங்களில் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X