GOAT: அப்டேட் கேட்டு கெட்டவார்த்தையால் திட்டிய ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை: தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பெரும்பாலான இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் கோட் படத்தின் அப்டேட் கேட்டு கெட்டவார்த்தையில் திட்டிய ஒரு ரசிகருக்கு வெங்கட்பிரபு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பொங்கல் பண்டிகையைக்குதி கோட் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் விஜய்யின் இன்னொரு லுக் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

GOAT director venkat prabhu Mass answer to vijay fan question

முன்னணி நடிகர்கள்: இப்படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு செக் வைக்கும் விதமாக படத்தை வெளியிடலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

கெட்டவார்த்தையால் திட்டிய ரசிகன்: இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவித்து இருந்தார். ஆனால், சொன்னபடி வெளியாகாததால், கடுப்பான நெட்டிசன் ஒருவர், எக்ஸ் தள பக்கத்தில், 'சிங்கிள் பாடல் வெளியாகும் என்று நீங்கள் சொல்லி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் வரவில்லை என்று கூறியதோடு, வெங்கட்பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டி இருந்தார்.

சரியான பதிலடி: இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு, விஜய்யின் ரசிகர் என்று கூட பார்க்காமல் அவருக்கு பதிலடி கொடுத்து பதில் அளித்துள்ளார். அதில், கோட் படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை சொல்லலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் இப்போ இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க, விஜய் அண்ணா ரத்தமே என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவி வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் கெட்ட வார்த்தையால் திட்டிய அந்த ரசிகரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒரு இயக்குநர், நம் தளபதியை வைத்து படத்தை இயக்கி வருகிறார், அவரிடம் மரியாதையாக அப்டேட் கேட்க வேண்டும், இப்படி அநாகரிகமாக கெட்ட வார்த்தையால் அவரை திட்டுவது சரியான முறை இல்லை என்று அந்த ரசிகருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X