அம்மா இறந்தப்போ.. பிரேம்ஜியை சமாளிக்க முடியல.. கண்கலங்கி பேசிய வெங்கட்பிரபு!

சென்னை: வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கோட் படத்தில் விஜய் அப்பா, அம்மா என இரண்டுவிதமான கெட்டப்பில் வந்து நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு உட்பட அதை அடுத்து கோட் படத்தில் நடித்திருக்கும் பிரபலங்கள் மீடியாக்களுக்கு, யூடியூப் சேனலுக்கு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறினர். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு, சகோதரன் பிரேம்ஜியின் திருமணம் குறித்து பேசினார்.

goat venkat prabhu premji

வெங்கட்பிரபு: அதில், அம்மா வேறு ஒரு காரணத்திற்காக சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு சென்ற போதுதான் கோவிட்டால் பாதிக்கப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து அவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆனால், ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டார்கள். அவர்களின் ஒரே வருத்தமே பிரேம்ஜி தனியாக இருக்கிறான். அவனுக்கு யாருமே இல்லை என்பது அவர்களின் பெரிய வேதனையாக இருந்தது. எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஒன்றாகத்தான் இருந்தோம். குழந்தைகள் வளரவளர இந்த வீடு வசதியாக இல்லை என்பதற்காக தனியாக வந்துவிட்டேன்.

சமாளிக்க முடியல: நான் தனியாக வந்த போது, பிரேம்ஜி அம்மாக்கூடத்தான் இருந்தான், அவர்கள் இறந்ததும் பிரேம்ஜியை சமாளிக்க முடியவில்லை, அதன் பிறகு அவனை சமாதானப்படுத்திக்கொண்டே இருந்தேன். உண்மையில் பிரேம்ஜியின் திருமணத்திற்கு காரணம் அம்மா தான், அவர்கள் அவனின் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து இருக்கிறார்கள். மாநாடு படம் வெற்றி பெற்றதற்கும், தளபதியுடன் கோட் படம் கிடைப்பதற்கும் அம்மாவின் ஆசிர்வாதம் தான் காரணம் என்று வெங்கட்பிரபு கண்கலங்கி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

திருமணம்: இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளை கொண்ட பிரேம்ஜி, 2006 ஆம் ஆண்டு சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, சென்னை 600 028 என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் அவரை நகைச்சுவை நடிகராக மாற்றியது. பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 45 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த பிரேம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X