அஜித்தை பிடித்தால் விஜய்யை பிடிக்கக் கூடாதா?.. ரசிகர்கள் திருந்தவே மாட்டாங்க.. வெங்கட் பிரபு ஓபன்!
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஒரு சில திரையரங்குகளில் ஆரம்பமாகி ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது.
ஓவர் சீஸில் லியோ படத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே இந்தப் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அர்ச்சனா கல்பாத்தி கடைசி வரை தளபதி ரசிகர்களுக்கு தரமான படத்தைக் கொடுக்க கடுமையாக உழைத்து வருகிறார். இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'மட்ட’ எனும் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகிறது.

கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் காலை 4:00 மணிக்கு கோட் திரைப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இதுவரை காலை 9:00 மணிக்கு தான் கோட் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது. அதிகாலை சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான் என்கின்றனர்.
கோட் புரோமோஷன் செய்யும் வெங்கட் பிரபு: தளபதி விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து கோட் படத்திற்கும் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்திற்கான புரமோஷனை இயக்குநர் வெங்கட் பிரபு யூடியூப் சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகள் மூலம் செய்து வருகிறார்.
கோட் படத்தில் அஜித்: அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கியுள்ள கோட் படத்தில் அஜித்தின் வாய்ஸ் அல்லது ரெஃபரன்ஸ் அல்லது அஜித்தே வரும் காட்சி இடம்பெறலாம் என்கிற தகவலை வெங்கட் பிரபு கூறியுள்ளார். இளம் வயது விஜய்க்கு பிடித்த நடிகராகவே அஜித் தான் இருப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ரசிகர்கள் சண்டை: தியேட்டருக்கு வெளியே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒரு காலத்தில் சண்டை போட்டு வந்த நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் அந்த சண்டை மிகவும் கேவலமான சண்டையாக மாறி வளர்ச்சி அடைந்திருக்கிறது. படு மோசமான வார்த்தைகள் மற்றும் ட்ரோல்களை பதிவிட்டு ரசிகர்கள் ஒவ்வொரு நடிகரையும் எந்த அளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவுபடுத்தி வருகின்றனர் என்றார்.
திருந்த மாட்டாங்க: ரசிகர்கள் சண்டையை நிறுத்தப் போவதோ அதை விட்டு விட்டு திருந்துவார்களா என்றால் நிச்சயம் திருந்த மாட்டாங்க, இந்த பேட்டிக்கு கீழ் கூட அவர்கள் என்னை திட்டத்தான் செய்வார்கள் என்றார்.
அஜித் - விஜய் இருவரையும் பிடிக்கக் கூடாதா?: அஜித்தை பிடித்தால் விஜய்யை பிடிக்கக் கூடாதா? விஜய்யை பிடித்தால் ரஜினிகாந்தை பிடிக்கக் கூடாதா? நடிகர்கள் ஒவ்வொருத்தரும் எந்தளவுக்கு மெனக்கெட்டு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரியுமா? தேவையில்லாமல் நடிகர்களை கொச்சைப்படுத்தி அசால்ட்டாக பேசிவிட்டு நான் அந்த நடிகரின் தீவிர ரசிகன் என்று சொல்கின்றனர்.
ரஜினி படம் கிடைத்தால்: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். ரஜினிகாந்த் படம் கிடைத்தால் மற்ற வேலைகளை தூக்கிப் போட்டுவிட்டு ரஜினி சார் படத்தை இயக்க போய்விடுவேன். நான் மட்டும் இல்லை அனைத்து இயக்குநர்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கும். அவர் ஒரு உச்ச நட்சத்திரம். அவரையும் தேவையில்லாமல் ஃபேன் வாருக்குள் கொண்டு வந்து நோகடிக்கிறாங்க என வெங்கட் பிரபு சோசியல் மீடியாவில் நடக்கும் சண்டைகள் குறித்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











