GOAT: பவதாரிணி மறைவு.... கலங்கிய யுவன், வெங்கட் பிரபு... GOAT ஷூட்டிங்கை கேன்சல் செய்த விஜய்!
சென்னை: விஜய்யின் GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்கை பவதாரிணியின் திடீர் மறைவால் யுவனும் வெங்கட் பிரபுவும் கண் கலங்கி நிற்க, விஜய் எடுத்த அதிரடி முடிவால் GOAT படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

GOAT ஷூட்டிங் கேன்சல்: விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் GOAT படப்பிடிப்பு சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த பிளான் செய்திருந்தார் வெங்கட் பிரபு.

இதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு உட்பட GOAT படக்குழுவினர் இலங்கை சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் தங்கை பவதாரிணி கேன்சர் பாதிப்பால் நேற்று மாலை இலங்கையில் உயிரிழந்தார். தமிழில் தனித்தன்மை வாய்ந்த பின்னணிப் பாடகியான பவதாரிணியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் பவதாரிணியின் மறைவால் யுவனும் வெங்கட் பிரபுவும் சோகத்தில் உள்ளனர். சென்னையில் இருந்த யுவன், உடனடியாக இலங்கை கிளம்பிச் சென்றார். யுவனின் இசையில் பல பாடல்கள் பாடியுள்ள பவதாரிணி, வெங்கட் பிரபுவின் படங்களிலும் பாடியுள்ளார். வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் கூட மெஹர்சைலா என்ற பாடலை பவதாரிணி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், விஜய்யின் GOAT படத்திலும் பவதாரிணி பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தங்கையின் மறைவு காரணமாக சோகத்தில் இருக்கும் வெங்கட் பிரபு உடனடியாக GOAT படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். விஜய்யும் இப்போதைக்கு GOAT ஷூட்டிங்கில் அவசரம் வேண்டாம், எல்லாம் சரியாகட்டும் என ஆறுதல் கூறியுள்ளாராம். இதன் காரணமாக GOAT படப்பிடிப்பு இப்போதைக்கு அதிகாரப்பூர்வமாக கேன்சல் ஆகியுள்ளது.
மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கைக்கு பதிலாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு இலங்கை ஷெட்யூலை மட்டும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பவதாரிணி மறைவு காரணமாக GOAT படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டதோடு, ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்களும் கொஞ்சம் தாமதமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











