Goat first single: கட்சி பாடலாக மாறிய கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஆனால், இந்த பாட்டிலும் பாட்டில்கள்?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி படம் வெளியாகுமா என்று தெரியவில்லை. கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலையே பார்ட்டி பாடலாக மாற்றியுள்ளார். வெங்கட் பிரபு ஒரு பக்கம் பார்ட்டி சாங் வேண்டும் எனக் கேட்க, விஜய் ஒரு பக்கம் கட்சி பாடல் வேண்டும் என கேட்க, யுவன் சங்கர் ராஜாவும் மதன் கார்கியும் இணைந்து இப்படியொரு பாடலை கிண்டிக் கொடுத்திருக்கின்றனர்.
பிரசாத் ஸ்டூடியோவில் கோட் படத்தின் சூட்டிங் தொடங்கியதுமே விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நடனமாடிய பாடல் படமாக்கப் பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த பாடல் தான் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் என்பது தற்போது தெளிவாகி விட்டது.

லியோ படத்தில் “நான் ரெடி தான் வரவா” பாடலிலேயே ஏகப்பட்ட அரசியல் குறியீடுகள் இருந்த நிலையில், இந்த பாடல் மொத்தமே கட்சி பாடல் போலவே உருவாகியிருப்பது ரசிகர்களையே சற்று ஷாக் ஆக்கி விட்டது.
யுவன் மீது கடைசி வரை டவுட்: வலிமை படத்தில் அஜித் குமாருக்கு “நாங்க வேறமாறி” பாட்டை பாட்டு காண்டாக்கிய யுவன் சங்கர் ராஜா விஜய்யின் கோட் படத்துக்கு மட்டும் என்ன சூப்பர் ஹிட் பாட்டையா போடப் போகிறார். கொஞ்சம் ஹைப்பை அளவாகவே வைத்திருப்போம் என கடைசி வரை விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவுகளை போட்டு வந்த நிலையில், சுமாருக்கும் மேல் சூப்பருக்கும் கீழ் ஒரு பாடலை போட்டுக் கொடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை சூப்பராக இருந்தாலும் பாடல் வரிகள் தான் ரொம்பவே பாடலை டல்லடிக்க வைக்கிறது. அதற்கு காரணம் மதன் கார்கிக்கு கொடுக்கப்பட்ட குழப்பமான கான்செப்ட்டாகத்தான் இருக்கும் என்பதும் தெரிகிறது.

எந்த பார்ட்டி?: வெங்கட் பிரபு “மச்சி ஓப்பன் தி பாட்டில்” ஸ்டைலில் பாட்டு வேண்டும் என கேட்க, விஜய் அதில், அரசியல் வரிகள் வந்தால் நல்லா இருக்கும் என ஆசைப்பட எந்த பார்ட்டி சாங் என்றே புரியாத அளவுக்கு ஒரு பாடலாக வெளியான பாடலுக்கு விசில் போடு என சிஎஸ்கேவுடன் கோர்த்து விட்டு செம காமெடி செய்துள்ளனர்.
பாட்டிலா இருக்கே?: கேம்பைன்னு பாடிய விஜய், கேம்பைன்னா சொன்னேன்.. ஷேம்பைன் என மாற்றி பாடும் வரிகளில் இருந்து பாடலுக்கு உழைத்தவர்களின் பெயர்கள் எல்லாம் சரக்கு பாட்டிலில் இடம்பெற இந்த பாடலுக்கும் அந்த அக்கா எதிர்ப்பை தெரிவிப்பாரா? என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
கஷ்டப்படும் ஆடும் பிரசாந்த்: விஜய்யை பார்க்காமல் பிரபுதேவா வேறலெவலில் ஆட்டம் போடுகிறார். அவருக்கு அடுத்து விஜய் வெறித்தனமாக அவருக்கு மேட்ச் பண்ண ஆடினால், பக்கத்தில் இருக்கும் பிரசாந்தின் நிலைமையை கொரியோகிராஃபர் ராஜு சுந்தரம் மாஸ்டர் கொஞ்சமாவது யோசித்து இருக்கலாம். ஆனால், பிரசாந்தும் நல்லாவே டஃப் கொடுத்து விஜய் மற்றும் பிரபுதேவாவுக்கு மேட்ச் செய்து ஆடியிருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். இப்படி மூன்று மல்டி ஸ்டார்ஸை வெங்கட் பிரபு ஒரே ஃபிரேமில் கொண்டு வந்து மாஸ் காட்டி விட்டார்.
விஜய்க்குத்தான் வாக்கு: அந்த மூன் வாக்கு ஆரம்பிக்கும் போதே விஜய்க்குத்தான் எங்க வாக்கு என லிரிக்ஸ் வரும் என நினைத்து முடிப்பதற்குள் அய்யாச்சாமி அதே லிரிக்ஸுடன் வந்து டைமிங்கில் ரைமிங் செய்து பார்ட்டி சாங்கை கட்சிப் பாடலாகவே மாற்றி விட்டார். விஜய் இதுவரை பாடியதிலேயே சுமாரான பாடலாகவே இந்த பாடல் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி விடுவார்கள் என்பது தனிக்கதை.


Click it and Unblock the Notifications











