twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடு மேய்க்கும் ஆதிவாசிப் பெண்.. பாடகி நஞ்சியம்மாள்.. தனது 62 வது வயதில் தேசிய விருது பெற்றது எப்படி?

    |

    சென்னை: பாடகி நஞ்சியம்மாள் ஜனவரி 1,1960ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பாலக்காடு பகுதியில் அட்டப்பாடி என்ற மலை கிராமத்தில் பிறந்தவர்.

    இவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு தான், ஆனால் நஞ்சியம்மாளின் பெற்றோர்கள் வாழ்க்கை நடத்துவதற்காக அட்டப்பாடியில் குடி பெயர்ந்தார்கள்.

    பாடகி நஞ்சியம்மாளை அதே பகுதியை சேர்ந்த நஞ்சப்பன் என்பவருடன் திருமணமும் நடந்தது. அதன் பிறகு இவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் தான் மிகவும் சுவாரஸ்யமானவை.

    என் உடல்.. என் உடை.. என் வாழ்க்கை.. கருத்து சொன்னவர்களை கண்டித்த பாடகி பூஜா வைத்தியநாத்! என் உடல்.. என் உடை.. என் வாழ்க்கை.. கருத்து சொன்னவர்களை கண்டித்த பாடகி பூஜா வைத்தியநாத்!

    நஞ்சியம்மாளின் தொழில் ஆடு மேய்ப்பது

    நஞ்சியம்மாளின் தொழில் ஆடு மேய்ப்பது

    இவர் 'அட்டப்பாடி' என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் என்பதனால், பொதுவாக மலை கிராமங்களில் ஆடு மாடு மேய்ப்பது தான் தொழில், இவரும் ஆடு மேய்க்கும் போது அவரின் மனதிற்கு தோன்றுவதை பாடலாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம்.

    கணவனிடம் இருந்து கிடைத்த பாராட்டு

    கணவனிடம் இருந்து கிடைத்த பாராட்டு

    நஞ்சியம்மாளின் பாடலைக் கேட்டு கணவர் நஞ்சப்பன் அவ்வப்போது ரசிப்பதும் உண்டாம், அவர்களிடம் நீ பாடும் பாடல் அருமையாக இருக்கிறது, வெளி உலக மக்களுக்கு தெரிந்தால் உனக்கு பெயரும், புகழும் கிடைக்கும் என்று அடிக்கடி சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

    வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பழனிசாமி

    வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பழனிசாமி

    'அட்டப்பாடி' பகுதியில் உள்ள ஊராட்சி மன்றத்தின் சார்பாக அவ்வப்போது கூட்டங்கள் நடப்பது உண்டு, அந்த நேரத்தில் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது; இது போன்று அந்த ஊர் மக்களின் வழக்கமாக இருந்து கொண்டிருந்திருக்கிறது. இதில் பாடிய நஞ்சியம்மாளில் குரல் தனித்துவமாக எல்லாரும் ரசிக்கும் படியாக இருந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 'பழனிசாமி' என்பவர், நஞ்சியம்மாளை இசை குழு நிகழ்ச்சி மூலமாக பாட வைத்திருந்திருக்கிறார்.இவரின் பாடல் வெகு ஜன மக்களிடையே பாராட்டு பெற்றதால் மும்பை போன்ற ,வெளி மாநிலங்களில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடி இருந்திருக்கிறார்.

    தேசிய விருது பெற்றுக்கொடுத்த இயக்குநர் சச்சி

    தேசிய விருது பெற்றுக்கொடுத்த இயக்குநர் சச்சி

    மலையாள இயக்குநர் "சச்சி" இயக்கத்தில் வெளியான"அய்யப்பனும் கோஷியும்" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'கலக்காத'தலைப்புப் பாடலைப் பாடி ரசிகர்களின் இதயங்களை வென்ற பழங்குடி கலைஞர் நஞ்சியம்மாள். தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்பே டைட்டில் டிராக்கும், பாடகி நஞ்சியாம்மாளும் பிரபலமடைந்தனர். யூட்டியூப்பில் வெளியான பாடல் ஒரு மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட மக்களால் காணப்பட்டது. இந்தப் பாடலை நஞ்சியம்மாளே எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார் என்பது பெருமையாக கருதப்படுகின்றது.

    English summary
    Singer Nanjiyamma was born on January 1, 1960 in the hilly village of Attappadi in the Palakkad district of Kerala. Their origin is Tamil Nadu, but Nanjiyamma’s parents migrated to Attapadi for occupation. Singer Nanjiyamma also got married to Nanjapan from the same area. What happened in his life after that is very interesting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X