கோட், கங்குவா, வேட்டையன்.. 1000 கோடி வசூலை எந்த படம் தொடும்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன?

சென்னை: இந்த ஆண்டு கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக போகிறது என்றதுமே கடந்த ஆண்டை போல தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் 1000 கோடி வசூலையே அசால்ட்டாக அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் 1000 கோடி ட்ரோல்களையும் மீம்களையும் அள்ளி இந்த ஆண்டின் படுமோசமான படமாக மாறிவிட்டது.

GOAT Kanguva Vettaiyan

இந்நிலையில், அடுத்ததாக கோட், கங்குவா மற்றும் வேட்டையன் படங்களை மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பி காத்திருக்கும் நிலையில், அந்த படங்களில் எந்த படம் 1000 கோடி வசூல் பெற தகுதியான படமாக இருக்கும் என்கிற போட்டியும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தெலுங்கு, கன்னடம்: கடந்த ஆண்டு ஷாருக்கான் பாலிவுட்டில் பதான், ஜவான் என ஒரே ஆண்டில் 2 மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை கொடுத்து விட்டார். 2 ஆயிரம் கோடிகள் படங்கள் மட்டுமின்றி ஹாட்ரிக் வெற்றியாக டங்கி மூலம் 500 கோடி ரூபாய் வெற்றியையும் கொடுத்தார். கன்னடத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி 1000 கோடி கிளப்பில் இணைந்தது. தெலுங்கில் இந்த ஆண்டு பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் 1100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

சொதப்பிய இந்தியன் 2: தெலுங்கில் ராஜமெளலி, நாக் அஸ்வின் என 1000 கோடி படம் கொடுக்கும் இயக்குநர்கள் இருந்தால், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியான ஷங்கர் இந்த முறை சிஷ்யன் அட்லீயை விட அதிரடி காட்டுவார் என இந்தியன் 2 படத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் விக்ரம் வெற்றிக்குப் பிறகு ரொம்பவே நம்பினர். கடைசியில் அவர்களே கலாய்க்கும் அளவுக்கு இந்தியன் 2வின் நிலைமை மோசமடைந்து விட்டது.

GOAT Kanguva Vettaiyan

விஜய்யின் கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் தான் 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்களும் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான கோட் படத்தின் 3 சிங்கிள்களையும் விஜய்யின் டீ ஏஜிங் முகத்தையும் பார்த்து அப்செட் ஆகி விட்டனர். கண்டிப்பாக கோட் படத்தின் டிரெய்லர் பார்த்த பின்னர் தான் அந்த படத்தின் மீது நம்பிக்கை வைப்பதா? வேண்டாமா? என்பது தெரியவரும்.

GOAT Kanguva Vettaiyan

வேட்டையன்: ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் 1000 கோடியை வசூல் செய்யுமா? என்றால் இந்த படம் நிச்சயம் ஜெயிலர் படத்தை போல மாஸாக இருக்குமா? என்பது சந்தேகம் தான். கிளாஸாக கதையம்சம் கொண்ட படமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த் என்ன மேஜிக் செய்யப் போகிறார் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

GOAT Kanguva Vettaiyan

கங்குவா கர்ஜிக்குமா?: கங்குவா இந்த ஆண்டு 1000 கோடியை கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு கொண்டு வரும் என அந்த படத்தின் தயாரிப்பு தரப்பே தொடர்ந்து பேசி வருகிறது. நேற்று வெளியான டிரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு அத்தனை பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை கங்குவா படைக்குமா? என்பது சந்தேகம் தான் என தோன்றியுள்ளது. மேலும், வேட்டையன் மற்றும் கங்குவா கிளாஷ் ஏற்பட்டால் இரண்டு படங்களுக்கும் சிக்கல் தான் என்கின்றனர். மொத்தத்தில் இந்த ஆண்டும் தமிழ் சினிமா 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைவது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X