Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ஆடுஜீவிதம் படத்தை நேற்று கமல்ஹாசன் உடன் இணைந்து மணிரத்னம் பார்த்து ரசித்தார். கமல்ஹாசனின் விமர்சன வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில், அந்த படத்தை பார்த்து விட்டு தக் லைஃப் இயக்குநர் மணிரத்னம் என்ன சொல்லியிருக்கிறார் என்கிற வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.
சுமார் 16 ஆண்டுகள் ஒரு படத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணித்து ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்றால், இந்தியாவிலும் உருவாக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் பிருத்விராஜ்.

சில ஆண்டுகள் கிடப்பில் கிடந்தாலே அந்த படம் வெளியாகும் போது பெரிதாக ரசிகர்களுக்கு புடிக்காமல் போய் விடும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து வந்தாலும் இந்த படம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரண்டு போன அக்ஷய் குமார்: ஆடுஜீவிதம் படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டு இந்த படத்துக்கா 2 அல்லது 3 வருடங்கள் பிருத்விரா உழைத்து இருப்பார் என நினைத்த அக்ஷய் குமாரிடம் 16 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன் என பிருத்விராஜ் சொன்னதும் ஷாக் ஆகி விட்டார். 2010ம் ஆண்டு இந்த படத்தின் கதை உருவானது என்றும் நிஜக் கதையை தழுவிய சர்வைவர் த்ரில்லராக மலையாளத்தில் உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சுமெல் பாய்ஸ் போல: குணா குகையில் விழுந்து விடும் சுபாஷை காப்பாற்ற அவரது நண்பர் குட்டன் எப்படி ரிஸ்க் கொடுத்து மீட்கும் சர்வைவர் த்ரில்லர் படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி 200 கோடி வசூல் ஈட்டியது. அதை போலவே இந்த படம் பாலைவனத்தில் தொலைந்து போகும் ஒரு மனிதன் பல நாட்கள் ஜீவித்து இருந்து எப்படி தண்ணீருக்காக கூட கஷ்டப்பட்டு கடைசியாக உயிர் பிழைத்து பாலை வனத்தில் இருந்து தப்பித்து வருகிறார் என்பது தான் கதை.
மணிரத்னம் விமர்சனம்: கமல்ஹாசன் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், அவருடன் அமர்ந்து ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ பார்த்த இயக்குநர் மணிரத்னம் அமேஸிங் என பாராட்டியுள்ளார். எப்படி இதை இந்த டீமால் சாத்தியமாக்க முடிந்தது என்றே புரியவில்லை என்றும் பிருத்விராஜின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசிகர்களுக்கு தெளிவாகத் தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியுள்ள அழகே தனி அழகு தான் என்றும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
நாளை ரிலீஸ்: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 28ம் தேதி மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. அதன் டிக்கெட் புக்கிங் ஓபனாகி விட்டது.


Click it and Unblock the Notifications











