GOAT: "ரஜினியை விட விஜய் தான் முக்கியம்.." GOAT படத்தில் கமிட்டானது குறித்து மனம் திறந்த பிரபலம்!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், The Greatest of All Time - GOAT என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதில் மலையாள நடிகர் ஜெயராம் கமிட்டானது குறித்து மனம் திறந்துள்ளார்.

ரஜினியை விட விஜய் தான் முக்கியம்
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 68 என தொடங்கப்பட்ட இந்தப் படத்துக்கு The Greatest of All Time - GOAT என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான இதில் விஜய்யின் தெறிமாஸ் போஸ்டர்களும் வெளியாகின. ஹாலிவுட் ஸ்டைலில் வெளியான இந்த போஸ்டர்கள் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 GOAT: Malayalam actor Jayaram says he likes Vijay more than Rajinikanth

The Greatest of All Time - GOAT படத்தில் விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர் ஜெயராமும் கமிட்டாகியுள்ளார். தளபதி 68 பூஜை நிகழ்ச்சியின் போது ஜெயராம் நடிப்பதை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால், அதன்பின்னரே The Greatest of All Time - GOAT படத்தில் ஜெயராம் நடிப்பது உறுதியானது.

இதுபற்றி ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஏற்கனவே வெங்கட் பிரபுவுடன் சரோஜா படத்தில் நடித்திருந்தார் ஜெயராம். அதேபோல், துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார். இதனையடுத்து விஜய் - ஜெயராம் காம்போ The Greatest of All Time - GOAT படத்தில் இணைந்துள்ளது. இதுபற்றி ஜெயராம் தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளாராம்.

அதாவது "விஜய்யை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்" என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயராம், "ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்திலும், விஜய்யின் The Greatest of All Time - GOAT மூவியிலும் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் நான் அதிகம் யோசிக்காமல் விஜய்யுடன் நடிக்க முடிவெடுத்தேன். இதிலிருந்து எனக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும் என தெரிந்துகொள்ளலாம்" என ஸ்மார்ட்டாக பதிலளித்துள்ளார்.

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவே பலரும் ஆசைப்படும் நிலையில், ஜெயராம் விஜய்யை டிக் செய்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வேட்டையன் படத்தில் தான் ரஜினியுடன் நடிக்க ஜெயராமிற்கு அழைப்பு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் விஜய்யின் தளபதி 68ல் கமிட்டாகிவிட்டார். இதனையடுத்து ஜெயராமின் இந்த பதிலை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதேநேரம் இதன் உண்மை பற்றியும் முழுமையாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X