GOAT படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் எங்கே தெரியுமா?.. வேற பிளான் போட்டிருக்கும் வெங்கட் பிரபு?

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெங்கட் பிரபு ஷூட் செய்து முடித்திருக்கும் சூழலில் க்ளைமேக்ஸ் காட்சியை எங்கு ஷூட் செய்யப்போகிறார் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. முதலில் இலங்கைக்கு செல்வதாக அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.

வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்திருந்திக்கிறார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

GOAT Movie Climax Shooting will held in Kerala Here are the full details

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்‌ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.

நிறுத்தப்பட்ட ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. படத்தை விரைவாக ரிலீஸ் செய்வதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டு அசுரத்தனமாக உழைத்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில் இளையராஜாவின் மகளும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் GOAT படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தொடங்கிய ஷூட்டிங்: தற்போது தனது சகோதரியின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருக்கும் வெங்கட் பிரபு மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்கும் வகையில் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்துவருகிறார் வெங்கட் பிரபு. இதனால் விஜய்யும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

க்ளைமேக்ஸ் ஷூட்டிங்: இந்நிலையில் GOAT படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது முதலில் இலங்கைக்கு சென்று ஷூட் செய்யலாம் என்று வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்ததாகவும்; ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கியிருப்பதால்; அங்கு சென்றால் அரசியல் ரீதியாக சில விவாதங்கள் எழலாம் என்று அதற்கு விஜய் நோ சொன்னதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் Green Field International Stadiumத்தில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X