GOAT ஆரம்பித்த வசூல் வேட்டை.. யப்பா வெளிநாடுகளில் முதல் நாள் வசூல் இவ்வளவா?.. தளபதி ஃபுல் ஃபார்ம்
சென்னை: விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படத்துக்கு இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. மேலும் வெங்கட் பிரபுவையும் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்டமாக கொண்டாடிவருகின்றனர். இதன் காரணமாக படக்குழு ஹேப்பி அண்ணாச்சி மூடில்தான் இருக்கிறார்கள். விஜய் நேற்று குடும்பத்துடன் GOAT படம் பார்த்ததாக கூறப்பட்டது. திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இன்று காலை படம் பார்த்தனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் GOAT. லியோ படத்தின் சுமாரான வரவேற்புக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் இன்று சென்றனர். படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ஹைப் ஏற்றக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். ஆனால் வைபவ், பிரேம்ஜி ஆகிய இரண்டு பேரும் தாங்கள் கொடுத்த பேட்டிகளில் உச்சக்கட்ட ஹைப்பை ஏற்றிவிட்டனர்.

வொர்த் GOAT: அவர்கள் ஏற்றிவைத்த ஹைப்போடு தியேட்டருக்குள் சென்ற ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே முழு ட்ரீட் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. அஜித்துக்கு மெகா ஹிட் கொடுத்த மாதிரி தங்கள் தளபதிக்கும் வெங்கட் கொடுப்பாரா என்று ஆவலோடு இருந்த ரசிகரக்ளுக்கு இயகுநர் எந்த குறையும் வைக்கவில்லை என்றே படம் பார்த்தவர்கள் கூறிவருகிறார்கள். முக்கியமாக ஸ்க்ரீன் ப்ளேவில் மேஜிக் செய்துவிட்டார்கள் என்றும் கொண்டாடிவருகிறார்கள் அவர்கள்.
ஏஐ, டீ ஏஜிங்: அதிலும் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த்தை கொண்டு வந்த சீனெல்லாம் தெறிக்கிறது. அதேபோல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான டீ ஏஜிங் விஜய் லுக் படத்தில் பக்காவாக செட் ஆகியிருக்கிறது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் படக்குழு சரியாகவே பயன்படுத்தியிருக்கிறது. மேலும் தங்களை டீ ஏஜிங்கிற்காக விமர்சித்தவர்களுக்கும் தக்க பதிலடியை கொடுத்திருக்கிறது படக்குழு என்கின்றனர் தளபதி ரசிகர்கள்.
வசூல் வேட்டை நடத்தும்: நிச்சயம் இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் பெரும் சாதனை படைக்கப்போவது உறுதி என்றும் இப்போதே ஆரூடம் கூறிவருகிறார்கள் விஜய் ஃபேன்ஸ். அதேசமயம் வசூல் எப்படியோ இருக்கட்டும் ஆனால் விஜய்யின் கடைசி மூன்று படங்கள் சந்தித்த ட்ரோல்கள் மாதிரி விமர்சன ரீதியாக இந்தப் படம் அடி வாங்கிவிடவே கூடாது என்றும் உண்மையான ரிசல்ட் நாளை தெரிந்துவிடும் என்றும் விஜய் ரசிகர்களின் ஒருதரப்பினர் கவலையில் இருக்கின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
வெளிநாட்டில் வசூல் வேட்டை: உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் படம் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இதுவரை GOAT செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ரசிகர்கள் அப்போ முதல் நாள் உலக அளவில் GOAT 100 கோடி ரூபாயை அசால்ட்டாக தாண்டிவிடும் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











