GOAT படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி.. லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. விஜய் - பிரசாந்த் மோதல்

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இந்தப் படம் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவரும் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT Movie Shooting Spot Video Leaked on Social Media

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது.

பேச்சு இல்லை வீச்சுதான்: அதேபோல் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளில் இன்னொன்று யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. அவரும், விஜய்யும் இணைந்து கடைசியாக புதிய கீதை படத்தில் பணியாற்றினார்கள். அதற்கு பிறகு இல்லை. தற்போது மீண்டும் இணைந்திருப்பதால் கண்டிப்பாக தரமான இசையை இந்தப் படத்துக்கு அவர் வழங்குவார் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இதில் விஜய் ஒரு பாடலை பாடவும் வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது. யுவனும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் GOAT பட இசை குறித்து பேசுகையில், இனி பேச்சு இல்லை வீச்சுதான் என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லீக்கான வீடியோ: இந்நிலையில் GOAT படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதாவது GOAT படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகியிருக்கிறது. அதில் விஜய்யும், பிரசாந்த்தும் ஒரு சாலையில் நின்றுகொண்டு தீவிரமாக எதைப்பற்றியோ வாக்குவாதம் செய்யும்படி காட்சிகள் இருக்கின்றன. தற்போது அந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. எப்படி இந்தக் காட்சி லீக்கானது என்பது தெரியாமல் படக்குழு குழம்பியிருக்கிறதாம். ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியானது என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X