GOAT: டாப் ஸ்டார் பிரசாந்த் எப்படி இருந்த மனுசன்யா... விஜய் பின்னாடி நிற்க வேண்டிய ஹீரோவா அவரு..?

சென்னை: விஜய்யின் GOAT - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று காலை வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இதில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் விஜய்யுடன் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், விஜய்யின் பின்னால் பிரசாந்த் நிற்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பிரசாந்த் எப்படி இருந்த மனுசன் தெரியுமா
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியானது. அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று காலை வெளியான GOAT மூன்றாவது போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 GOAT: Netizens are trolling Prashant who is standing behind Vijay in the GOAT poster

அதில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கையில் மெஷின் கன் துப்பாக்கியுடன் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். Meet the GOAT Squad என்ற கேப்ஷனுடன் வெளியான இந்தப் போஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இதில் விஜய்யின் பின்னால் பிரசாந்த் நிற்பதை அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே கோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த்.

வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான பிரசாந்த், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், ஜீன்ஸ் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விஜய்யே ஒருமுறை தான் காலேஜ் படிக்கும் போது க்ளாஸ் கட் அடித்துவிட்டு பிரசாந்த் படங்களை தியேட்டரில் சென்று பார்த்துள்ளேன். அவரது படங்களை விசிலடித்து பார்த்து ரசித்தவன் என பாராட்டியிருந்தார்.

ஆனால், தற்போது விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரசாந்தும் ஒரு லீட் ரோலில் நடிப்பது காலத்தின் வேடிக்கையாகிவிட்டது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பிரசாந்துக்கு ஒருநேரத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவர்களால் பிரசாந்த் விஜய்யின் பின்னால் ஒரு கோ ஆக்டராக நிற்பதை ஜீரணிக்க முடியவில்லை. "காலம் தான் எவ்வளவு கொடூரமானது...!? டாப் ஸ்டாராக முன்னால் நிற்க வேண்டிய பிரசாந்த் இப்படி பின்னால் நிற்கிறாரே" என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

கடைசியாக பிரசாந்த் நடித்த அந்தகண் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பிலேயே இருக்கின்றது. முக்கியமாக பிரசாந்த், விஜய் இருவருமே அவர்களது அப்பாவின் அறிமுகத்தால் சினிமாவில் தடம் பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X