GOAT: விஜய்க்கு சவால் விடும் பிரசாந்த் லுக்... ட்ரெண்டாகும் GOAT ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படக்குழு அறிவித்திருந்தது. நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டு போஸ்டர்களுடன் GOAT டைட்டில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற சீனியர் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான போட்டோ வைரலாகி வருகிறது.

வைரலாகும் GOAT ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

விஜய்யின் 68வது படமான The Greatest of All Time - GOAT ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் கதை குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும், GOAT படத்தின் ஸ்க்ரிப்ட் என்னவென்பதை சர்ப்ரைஸ்ஸாகவே வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

 GOAT: Prashanth and Prabhu Deva at the GOAT shooting spot photo is trending

அதேநேரம் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்யின் போஸ்டர்ஸ் மட்டுமே டைட்டில் அறிவிப்புடன் வெளியானது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே GOAT படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 1980களில் மாஸ் காட்டிய சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன், 1990களில் கெத்து காட்டிய டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா ஆகியோரும் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த பிரசாந்த், GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்திருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் செம்ம ஹைப் கொடுத்துள்ளது. முக்கியமாக விஜய் சினிமா கேரியரை தொடங்கும் முன்பே பிரசாந்த் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் GOAT படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்தின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் தான் மோகன், பிரபுதேவா இருவரது கேரக்டரும் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

இந்நிலையில், இதுவரை GOAT படத்தில் இருந்து விஜய்யின் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது. தற்போது முதன்முறையாக பிரசாந்தின் லுக்கும் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரசாந்துடன் பிரபுதேவா இருக்கும் போட்டோ இணையத்தில் லீக்காகியுள்ளது. அதில், பிரசாந்த் கொஞ்சம் நீளமான முடியுடனும், பிரபுதேவா அவரது ட்ரேட் மார்க் ஹேர் ஸ்டைலிலும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோ GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரசாந்த் தான் வில்லனா என கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர். விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா என வித்தியாசமான காம்போவில் உருவாகி வரும் GOAT நிச்சயமாக ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதை அடுத்து, மற்ற நடிகர்களின் போஸ்டரையும் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X