GOAT release date: விஜய்யின் கோட் படம் இந்த தேதியிலா ரிலீஸ் ஆகிறது?.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் சென்னையில் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்து இலங்கையில் சில இடங்களில் படத்தின் ஷூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் பெரிய பண்டிகையை டார்கெட் செய்து வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அந்த படத்தை இயக்கிய அட்லீ அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். இந்நிலையில், அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தி கோட் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

GOAT release date is expecting on this month?

அப்பா மகன் என டபுள் ஆக்‌ஷன்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான போஸ்டரில் தி கோட் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் விஜய்யின் இன்னொரு லுக் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.

பண்டிகை ரிலீஸ் ஆகுமா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தை ஆயுத பூஜை ரிலீஸாக வெளியிட்ட நடிகர் விஜய் அடுத்து பக்ரீத் பண்டிகையை டார்கெட் செய்து தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது குறித்த எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

இந்த தேதியில் தான் ரிலீஸ்?: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் கோட் திரைப்படம் ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் படத்தை சீக்கிரமே வெளியிட்டு விடலாமா? என விஜய் கேட்டு வருவதாகவும் மே மாதம் படத்தின் ரிலீஸ் முந்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோலோ ரிலீஸ் தான் டார்கெட்: சிஜி மற்றும் டீ ஏஜிங் பணிகளும் வேகம் எடுத்திருக்கும் நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு செக் வைக்கும் விதமாக படத்தை வெளியிடலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வரும் நிலையில், வாரிசு vs துணிவு கிளாஷ் காரணமாக இருவருக்குமே பலத்த அடி வாங்கியது என்பதால் சோலோ ரிலீஸ் ஆகவே வரலாம் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X