GOAT: விஜய்யை விட அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த பிரபலம்... GOAT சர்ப்ரைஸுக்கு முடிவே இல்லையா..?
சென்னை: விஜய்யின் 68வது படமான GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், GOAT படத்திற்காக விஜய்யை விட இன்னொரு பிரபலம் தான் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் GOAT படத்தில் தரமான ஆக்ஷன் ட்ரீட் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அன்லிமிடெட் சர்ப்ரைஸ் மோடில் GOAT
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் - யுவன் கூட்டணியில் பல ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த் இருவரும் GOAT படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகவிருப்பது ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளது. அதேநேரம், பொங்கல் ஸ்பெஷலாக வெளியான GOAT போஸ்டரில், விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நண்பர்களாக நடிப்பதும் ரசிகர்களுக்கு படம் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
1990களில் டாப் ஹீரோவாக மாஸ் காட்டிக் கொண்டிருந்த பிரசாந்த், GOAT படத்தில் எப்படி கம்பேக் கொடுக்கப் போகிறார் என்பது தான் கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. அதேபோல், GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளில் விஜய்க்கு டஃப் கொடுத்து டான்ஸில் மிரட்டியுள்ளாராம் பிரசாந்த். இதனால் GOAT படத்தில் விஜய், பிரசாந்த் இருவரது கேரக்டரும் செம்ம வெயிட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு சவால் விடும் வகையில் GOAT படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து அசுரத்தனமாக உழைத்து வருகிறாராம். GOAT என்ன மாதிரியான ஜானரில் உருவாகும் படம் என்பது இப்போது வரை உறுதியாக தெரியவில்லை. ஆனால், விஜய் ஸ்டைலில் மாஸ் & க்ளாஸ் படமாக இருக்கும் என்பதோடு, ஆக்ஷனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படி இதுவரை GOAT படத்திற்காக மட்டும் மொத்தம் 5 ஆக்ஷன் காட்சிகளை ஷூட் செய்து முடித்துவிட்டார் வெங்கட் பிரபு. இதுவே விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் போதாது என்பதை வெங்கட் பிரபு நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதனால் இன்னும் 3 அல்லது 4 ஆக்ஷன் காட்சிகள் GOAT படத்திற்காக ஷூட் செய்யவுள்ளாராம் வெங்கட் பிரபு. இதனால் GOAT படத்தில் விஜய்யின் ஆக்ஷன் ட்ரீட் தியேட்டரை தெறிக்க விடும் என்பது உறுதி.
இதற்காக GOAT படத்தில் விஜய்யை விட அதிகம் உழைத்துள்ளது ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தானாம். அதாவது இவர் தான் விஜய்யை விட அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதன்படி, GOAT படத்திற்காக திலீப் சுப்பராயன் மொத்தம் 100 நாட்களுக்கும் அதிகமாக கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. GOAT ஷூட்டிங் தொடங்கி இதுவரை மொத்தமே 70 முதல் 80 நாட்கள் வரை தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த நாட்களில் பாடல் காட்சிகளை தவிர மற்ற எல்லா ஷூட்களிலும் திலீப் சுப்பராயன் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











