GOAT Box Office: விமர்சனங்களை கடந்து ஓடும் ’கோட்’.. தமிழ்நாட்டில் லைஃப் டைம் இத்தனை கோடி வருமா?
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நட்சத்திர பட்டாளமே நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமாக இல்லை என கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா என சவுத் இந்தியாவிலேயே கோட் படத்திற்கு வரவேற்பு முற்றிலுமாக குறைந்து காணப்படும் நிலையில், பெரும் வசூலை இந்த படம் குவிக்காது என்கிற கருத்துக்கள் நிலவி வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் தனது மொத்த பவரையும் தளபதி விஜய் காட்டி வரும் நிலையில், கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் கலெக்ஷனை அள்ளும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 100 கோடி வசூல்: விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், அபியுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 110 கோடிக்கும் மேல் வசூலை இதுவரை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அர்ச்சனா அக்கா அமைதி: கோட் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கெத்தாக 126 கோடி வசூல் செய்தது என அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி அதன் பின்னர் 4 நாட்களில் படம் 288 கோடி வசூல் செய்தது என அதிரடியாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார். ஆனால், அதன் பின்னர் கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்காமல் அமைதி காத்து வந்தாலும் தொடர்ந்து இந்தியிலும் வெளிநாடுகளிலும் படம் பாசிட்டிவாக ஓடி வருவதாக ட்வீட்களை ஷேர் செய்து வருகிறார். இன்று அல்லது நாளை இந்த வாரத்துக்கான ஹைப்பை எகிற வைக்க பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

225 கோடி வருமா?: கோட் திரைப்படம் இந்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிதாக எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், தொடர்ந்து குடும்பங்கள் மற்றும் ரசிகர்களின் அன்பால் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரமும் பெரிய படங்கள் இல்லாத நிலையில், 3 வாரங்கள் தொடர்ந்து கோட் ஓடும் என்றும் அதிகபட்சமாக 225 கோடி வரை தமிழ்நாட்டிலேயே வசூல் வரும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

வெற்றி விழா நடைபெறுமா?: தளபதி விஜய்யின் கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் நடைபெறாத நிலையில், லியோ படத்துக்கு நடைபெற்றது போல வெற்றி விழாவாவது நடைபெறுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வரும் நடிகர் விஜய் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், வெற்றி விழா நடப்பது டவுட்டு தான் என்றும் கூறுகின்றனர்.
தளபதி 69 ஷூட்டிங் எப்போ?: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு அடுத்ததாக நவம்பர் மாதமே தளபதி 69 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துக் கொள்வார் என்றும் கூறுகின்றனர். தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு அதிகபட்சமாக 275 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











