கோட் டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா?.. தமிழில் கில்லி.. இந்தி, தெலுங்கில் கடைசி சீனே வேற!
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் அறிவித்தபடி இன்று மாலை 5 மணிக்கு விஜய் வெளியிட்டார்.
கோட் படத்தின் டீ ஏஜிங் பிரச்சனை குற்றச்சாட்டுகளுக்கு ஒருவழியாக டிரெய்லரில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதற்காகத்தான் சில நாட்கள் தாமதமாக டிரெய்லர் வெளியானதா? என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

நாளைய தீர்ப்பு படத்தில் பார்த்த விஜய்யை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டாரே வெங்கட் பிரபு என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யா ரசிகர்கள் படத்தின் டிரெய்லரில் குறை இருக்கிறதா? என தேடி ட்ரோல் செய்து வருகின்றனர்.
யூடியூபே திணறுது: கோட் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி டிரெய்லரையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். கோட் படத்தின் டிரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்தில் 3 மில்லியன் வியூஸ் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தி மற்றும் தெலுங்கு டிரெய்லர்களும் ஒரு மில்லியன் வியூஸை நெருங்கி வருகின்றன.
தமிழ் டிரெய்லரில் கில்லி: காந்தியாக இருக்கும் விஜய் குடித்துக் கொண்டே இருப்பதாக லைலாவிடம் சினேகா புகார் அளிக்கும் சீன் வருகிறது. தனது நண்பர்களுடன் சரக்கடித்து பார்ட்டி பண்ணும் விஜய் அதிலிருந்து மாறி பட்டை எல்லாம் போட்டுக் கொண்டு சாமி ரூமில் இருந்து மருதமலை மாமணியே முருகைய்யா என பாடிக் கொண்டு வரும் காட்சி தமிழ் டிரெய்லரில் கடைசியில் இடம்பெற்றுள்ளது. கில்லி படத்தில் இதே பாடலை நடிகர் விஜய் பாடும் காட்சிகள் கிளாசிக் காமெடி ஹிட். அதை அப்படியே ரீக்ரியேட் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.
தெலுங்கு, இந்தியில் மிஷன் இம்பாசிபிள்: டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் போன்ற படத்தை விஜய்யை வைத்து செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் தான் கற்பனையாக ஸ்வாட்ஸ் எனும் ரகசிய ஏஜெண்ட் டீமை உருவாக்கி அதில், தலைவராக விஜய்யை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். கிளைமேக்ஸில் சென்னையில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து விட்டார்கள், எப்படி எடுப்பது என ஜெயராம் பீதியடைய பிளான் B முதல் பிளான் Z வரை இருக்கு என மிஷன் இம்பாசிபிள் தீமை வாயிலேயே வாசித்தபடி விஜய் கோட் சூட்டில் செல்லும் காட்சியை வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
செம யுக்தி: விஜய் ரசிகர்கள் தமிழ் டிரெய்லரை மட்டும் பார்த்து விட்டு தெலுங்கு மற்றும் இந்தி டிரெய்லரை பார்க்காமல் போய் விட்டால் வியூஸ் எகிறாதே என்கிற யுக்தி காரணமாக தெலுங்கு மற்றும் இந்தி டிரெய்லரில் கடைசியில் வேறு காட்சியை வெங்கட் பிரபு வைத்துள்ள நிலையில், தமிழ் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மற்ற மொழி டிரெய்லரையும் பார்த்து ஃபயர் விட்டு வருகின்றனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுமா? என்கிற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. கோட் டிரெய்லரை தாண்டி புரமோஷன் பணிகளை படக்குழு தீவிரப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை.


Click it and Unblock the Notifications











