GOAT படத்தில் விஜய்யின் விரல் துண்டாகும் காட்சி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ!

சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாம். இந்நிலையில், GOAT படத்தில் விஜய்யின் விரல் துண்டாகும் காட்சி இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

கோட் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ

விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இந்தாண்டு ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பெரிய நட்சத்திரக் கூட்டணியே நடித்து வருகிறது. மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், மாஸ்டர் பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 GOAT: Thalapathy Vijay Stunt double posted GOAT shooting spot pics on trending

பவதாரிணி மறைவு காரணமாக கோட் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய வெங்கட் பிரபு விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறாராம். ஏற்கனவே இந்தப் படத்திற்காக 5 ஆக்‌ஷன் காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பைட் சீன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இதற்கான ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது இப்போது எடுக்கப்படும் சண்டைக் காட்சியில் விஜய்யின் விரல் துண்டாவதைப் போல ஒரு சீன் உள்ளதாம். இந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதால் prosthetics technology-ஐ பயன்படுத்தியுள்ளாராம் வெங்கட் பிரபு. இது ஏற்கனவே கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டெக்னாலஜியில் விஜய்யின் விரல் துண்டாவதை போல எடுக்கப்பட்ட போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

போரில் நடக்கும் சண்டைக் காட்சியில் விஜய்யின் விரல் துண்டாவதை போல ஷூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சீனை திரையில் பார்க்கும் போது ரசிகர்களே இது உண்மை என நம்பிவிடுவார்கள் என படக்குழு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இதனிடையே கோட் படத்தின் முதல் பாடலை வெளியிடவும் வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டாராம். கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியாகி பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்த கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் திரைப்படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது விஜய் அரசியலில் களமிறங்குவதால் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம். கோட் தீபாவளிக்கு ரிலீஸானால், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் கிடைக்கும் என்பதோடு, இந்தாண்டு முழுவதும் தனது வைப் இருக்கும் படி பார்த்துக்கொள்ளலாம் என விஜய் பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X