ஓவர்சீஸில் விஸ்வரூபம் எடுத்த கோட் டிக்கெட் புக்கிங்.. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

goat vijay box office

இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை ஓவர்சீஸில் படைத்து வருகிறது.

ஓவர்சீஸ் டிக்கெட் புக்கிங்: அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக "மாஸ்டர், பீஸ்ட்" என தளபதி விஜய்யின் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.

goat vijay box office

வேறலெவல் ரெக்கார்டு: ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவில், இப்படத்தினை அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது. அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதனைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

goat vijay box office

தேவரா படம்: ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ சேல் சம்பவம்: ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் விஜய் நடித்த கோட் திரைப்படம் முன்பதிவில் மட்டுமே 1 மில்லியன் டாலரை வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் கனடாவில் 4 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்துள்ளதாகவும் படம் வெளியாவதற்கு முன்னதாக 1 மில்லியன் டாலரை அமெரிக்கா மற்றும் கனடாவில் பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X