GOAT ட்ரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. சுதந்திர தினத்துக்கு வருதோ?.. அர்ச்சனா வெளியிட்ட அப்டேட்
சென்னை: கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நட்பு, கிரிக்கெட் ஆகியவைகளை மையமாக வைத்து படு ஜாலியாக அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அவர். படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக முதல் பட இயக்குநர் போன்றே அவர் பணியாற்றவில்லை. அனுபவம் மிக்க இயக்குநர் போல் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

அடுத்தடுத்த ஹிட்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சரோஜா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக த்ரில்லர் ஜானரிலும் தான் கைதேர்ந்தவர் என்பதை வெங்கட் பிரபு அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் தோல்வியடைந்தது. படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் படம் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது என்றும்; ரொம்பவே கேஷுவலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.
மெகா ஹிட்: வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் அதிரிபுதிரி வரவேற்பை பெற்றது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.
GOAT:மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
அர்ச்சனா சொன்ன அப்டேட்: இந்தச் சூழலில் கோட் படம் குறித்து நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அர்ச்சனா, 'படத்தின் ட்ரெய்லர் ரெடியாகிவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் ட்ரெய்லர் வெளியாகும். அதுகுறித்த முறையான அப்டேட் நாளை (இன்று) வெளியாகும்' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அர்ச்சனா என்ன மாதிரியான அப்டேட்டை வெளியிடப்போகிறார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் அவர் தற்போது கோட் பட அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி கோட் பட ட்ரெய்லர் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். மேலும் அநேகமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துவருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











