தொடர்ந்து பரவும் நெகட்டிவிட்டி..GOAT படக்குழு எடுத்திருக்கும் முடிவு இதுவா?..ஓகே சொல்லிட்டாரா விஜய்?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது. படமானது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் சூழலில் படத்திலிருந்து இதுவரை வெளியாகியிருக்கும் மூன்று சிங்கிள்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக விஜய்யின் ரசிகர்கள் சோர்ந்து போயிருக்கின்றனர். இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக அவை சக்கைப்போடு போட்டதாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் சொன்னாலும் விமர்சன ரீதியாக ட்ரோல்களை சந்தித்தன. அநேகமாக கடந்த பல வருடங்களில் விஜய்யின் படங்களில் வரிசையாக இப்படி ட்ரோலை சந்தித்தது இந்த மூன்று படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியிருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இப்படி அவர்கள் அப்செட்டில் இருக்கும்போது ஸ்வீட் சர்ப்ரைஸாக வெளியானது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி சேர்கிறது என்று. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் GOAT படம் விஜய்க்கும் சரி, வெங்கட் பிரபுவுக்கும் சரி முக்கியமான படம்தான். ஏனென்றால் வெங்கட் பிரபு இதற்கு முன்பு இயக்கிய கஸ்டடி படம் மோசமான தோல்வியை தழுவியது. எனவே இந்தப் படத்தில் தானும் கம்பேக் கொடுத்து விஜய்க்கும் தரமான படம் கொடுக்க வேண்டுமென்பதில் வெங்கட் பிரபு தெளிவாக இருக்கிறார்.
டீ ஏஜிங்: இந்தப் படத்தில் வெங்கட் பிரபு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறார். விஜய்யின் வயதை குறைத்து காண்பிப்பதற்காக அமெரிக்காவரை சென்று வேலை செய்துவந்தார்கள் விஜய்யும், வெங்கட் பிரபுவும். விஜய் ஏற்கனவே இளமையாக இருப்பவர். எனவே அவரை டீ ஏஜிங்கில் பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தார்கள்.மேலும் இந்தப் படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரண்டு சிங்கிள்கள்: அதேபோல் பல வருடங்கள் கழித்து விஜய் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் காரணமாக பாடல்கள் மீது உச்சக்கட்ட ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த ஆர்வத்தை நிறைவேற்றாமலே போயின படத்திலிருந்து இதுவரை வெளியாகியிருக்கும் மூன்று பாடல்கள். அதேபோல் மூன்றாவது சிங்கிளில் டீ ஏஜிங் விஜய்யை காணவே சகிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறினர்.
கோட் படக்குழுவின் முடிவு: மூன்றாவது சிங்கிள் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைவிடவும் பயம்தான் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படி தொடர்ந்து படத்தின் மீது ஒருவித அதிருப்தியும், பயமும் ரசிகர்களுக்கு நிலவுவதால் அதனை போக்கும் விதமாக படக்குழு ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது படத்தின் ட்ரெய்லர் கட்டை சூப்பராக ரெடி செய்திருக்கிறாராம் வெங்கட் பிரபு. அதனை விஜய்யிடம் காண்பித்து ஓகே வாங்கிவிட்டதாகவும்; ஆகஸ்ட் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது,


Click it and Unblock the Notifications











