GOAT Review: கோட் ட்விட்டர் விமர்சனம்.. முதல் பாதியை போல 2ம் பாதியிலும் விஜய் தெறிக்கவிட்டாரா?
சென்னை: The Greatest of All Time சுருக்கமாக GOAT என டைட்டில் வைத்த இடத்திலேயே சிக்ஸர் அடித்த வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு மங்காத்தா, சிம்புவுக்கு ஒரு மாநாடு கொடுத்ததை போல விஜய்க்கு இந்த கோட் படத்தை இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
செப்டம்பர் 5ம் தேதி சொன்ன தேதியில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அத்தனை தடைகளையும் சிஜி, ஏஐ, டீ ஏஜிங் உள்ளிட்ட அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்து படத்தை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ரசிகர்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது.

தளபதி 69 படத்துடன் விஜய் நடிப்பதை விட்டு விட்டு அரசியலுக்கு செல்லவுள்ள நிலையில், வினோத்தின் படம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுடன் இருக்கும் விஜய் ரசிகர்கள் கோட் படத்தை கடைசி படமாக நினைத்தே கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல் பாதி பார்த்து விட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்த நிலையில், இரண்டாம் பாதியை பார்த்து விட்டு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
கோட் பிளாக்பஸ்டர்: கோட் படத்தில் ஓபனிங் காட்சி மற்றும் இடைவேளை செம ட்விஸ்ட். இரண்டாம் பாதியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு தரமான ட்விஸ்ட் இருக்கு. மங்காத்தா கிளைமேக்ஸை விட கோட் சூப்பர். யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் வேறலெவல். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே தரமான படமாக கோட் உள்ளது என இரண்டாம் பாதியை பார்த்து விட்டு இந்த ரசிகர் விமர்சனம் கொடுத்துள்ளார்.

வெற்றி நாயகன்: லியோ படத்தின் முதல் பாதி சூப்பர் ஹிட் என ரெஸ்பான்ஸ் வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஃபிளாஷ்பேக் போர்ஷன் படத்தை கெடுத்து விட்டது என ரசிகர்கள் கடுப்பான நிலையில், அந்த தவறை வெங்கட் பிரபு செய்யாமல் விஜய்க்கு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோட் சுமார் தான்: கோட் படத்தின் முதல் பாதி நல்லா போன நிலையில், இரண்டாம் பாதி அந்தளவுக்கு சூப்பராக இல்லை. சுமாரான படம் தான் கோட். தளபதி விஜய்யின் நடிப்பு வேறலெவல். யங் விஜய்யின் அட்டகாசம் தான் படத்திற்கு பலமே. யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிதாக கை கொடுக்கவில்லை. 20 நிமிஷம் படத்தை ட்ரிம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என இந்த நெட்டிசன் படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

சில குறைகள் இருக்கு: கோட் படத்தின் 2ம் பாதியில் சில குறைகள் இருந்தாலும் இந்த படம் பிளாக்பஸ்டர் படம் தான். யோகி பாபுவின் காமெடி எல்லாம் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கு. முழுக்க முழுக்க இதுவொரு கமர்ஷியல் படம்தான். தளபதி ரசிகர்களுக்கு தியேட்டரில் மிகப்பெரிய விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

நிறைகளும் குறைகளும்: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் ஏகப்பட்ட நிறைகளும் சில குறைகளும் உள்ளன. முதல் பாதி கதையை செட் செய்த நிலையில், இரண்டாம் பாதி நான் ஸ்டாப்பாக சென்றது சூப்பர். பாடல்கள் தான் படத்தின் கதைக்கு வேகத்தடையாக அமைந்து விட்டன. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் சூப்பர், சில இடங்களில் சுமார், இளைய தளபதி விஜய்யின் டீ ஏஜிங் சில இடங்களில் சொதப்பி விட்டது என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கண்டிப்பாக படம் பிளாக்பஸ்டர் தான் என்றும் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை எனக் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











