GOAT: “யோவ் GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் விடுங்கய்யா.. சீக்கிரம் வருது ப்ரோ” அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
சென்னை: விஜய்யின் 68வது படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி அப்டேட் கேட்க, அதற்கு வெங்கட் பிரபு கொடுத்துள்ள ஜாலியான பதில் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் GOAT படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்து வருகிறதாம்.

இந்நிலையில் கோட் ஷூட்டிங் தற்போது சென்னை தாம்பரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு ஷெட்யூல் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இனிவரும் நாட்களில் கோட் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபுவே தரமான அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்.
கோட் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளது அனவரும் அறிந்ததே. அதேபோல் படம் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங்கை யுவன் முடித்துவிட்டார். இதனையடுத்து முதலில் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங் முடித்துவிட்டு தான் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்குச் சென்றார் வெங்கட் பிரபு. இந்தப் பாடல் தர லோக்கலில் சும்மா தெறிக்கவிடும் எனவும் யுவன் அப்டேட் கொடுத்திருந்தார்.
அதேபோல் கடைசியாக கிடைத்த தகவலின் படி, கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் விஜய்யுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தப் பாடல் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரசிகர் ஒருவர் GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி ட்வீட் செய்திருந்தார்.
அதில் "யோவ் சீக்கிரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடுங்கய்யா.." என வடிவேலுவின் இமேஜ் போட்டு அப்டேட் கேட்டிருந்தார். ரசிகரின் கதறலை பார்த்து மனம் உருகிய வெங்கட் பிரபு, அதே ட்வீட்டில் அவருக்கு அப்டேட் கொடுத்துள்ளார். GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் "சீக்கிரமே வரும் ப்ரோ.." என வெங்கட் பிரபு கூறியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் அல்லது ஓரிரு மாதங்களில் கோட் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











