GOAT: வெங்கட் பிரபு ஷேர் செய்த GOAT மோஷன் போஸ்டர்... விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூஇயர் ஸ்பெஷலாக வெளியானது. அதன்படி தளபதி 68 டைட்டில், தி கிரேட்டஸ்ட் ஆஃல் ஆல் டைம் - GOAT என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
வைரலாகும் GOAT மோஷன் போஸ்டர்
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 68 என தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக GOAT படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தன.

The Greatest of All Time - GOAT என்ற டைட்டில் அறிவிப்புடன் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதன் மூலம் இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியானது. இரண்டு விஜய்யின் லுக்கும் வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்திருந்தது. இதனையடுத்து GOAT படத்தில் இருந்து என்ன அப்டேட் வெளியாகும் என எதிர்பார்ப்பு காணப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியாகிவிட்டதாக அப்டேட் கொடுத்திருந்தார். அதேபோல், விஜய், இளையராஜா இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே இந்த இரண்டில் ஒன்றை GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளாக விரைவில் படக்குழு வெளியிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதிர்பாராதவிதமாக வெங்கட் பிரபு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அதில் GOAT படத்தின் மோஷன் போஸ்டரை அவர் ஷேர் செய்துள்ளார். யுவன் பிஜிஎம் உடன் செம்ம மாஸ் & கிளாஸாக உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் தரமாக உருவாகியுள்ளது. ஆனால் இது படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் கிரியேட் செய்யப்பட்ட ஃபேன்மேட் மோஷன் போஸ்டரான இது வெங்கட் பிரபுவுவை இன்ஸ்பையர் செய்துள்ளது. இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அவர், 'நைஸ் ப்ரோ’ என அந்த ரசிகரை பாராட்டியுள்ளார்.
விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் GOAT படத்தில் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, இவானா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் GOAT சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் கமர்சியலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











