GOAT: “விஜய்ய ஏலியன்ஸ் கடத்தினா என்ன நடக்கும்..” GOAT ஒன் லைன் இதுதானா..? உளறிய வெங்கட் பிரபு!

சென்னை: விஜய்யின் தளபதி 68 டைட்டில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அதாவது GOAT என படக்குழு அறிவித்துவிட்டது. அதேபோல், இந்தப் படத்தில் இருந்து விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இதனையடுத்து GOAT படத்தின் கதை குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் GOAT
விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் தளபதி 68 டைட்டிலை படக்குழு அறிவித்தது. நியூ இயர் ஸ்பெஷலாக வெளியான தளபதி 68 டைட்டில் The Greatest of All Time - GOAT என்பது விஜய் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டில் மட்டும் இல்லாமல், விஜய்யின் போஸ்டர்களும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தெறிமாஸ் காட்டின.

 GOAT: Venkat Prabhu told the oneline story of GOAT

இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது கன்ஃபார்ம் ஆகிவிட்ட நிலையில், அடுத்து கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். படத்தின் டைட்டிலில், "A Venkat Prabhu Hero" என வெங்கட் பிரபு டேக் லைன் கொடுத்துள்ளதும் இது பக்கா கமர்சியல் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது. ஆனால் GOAT சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் மூவியாக இருக்கலாம் என தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது தளபதி 68 அபிஸியல் அப்டேட் வெளியாகும் முன்னரே, இந்தப் படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் "இளைய தளபதி விஜய் மாதிரி ஒரு ஹீரோவ, ஏலியன்ஸ் கடத்திட்டுப் போய்ட்டா அங்க என்ன நடக்கும்.." என தளபதி 68 கதைக்கு லீட் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. அதனால் கோட் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏலியன்ஸ் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக விஜய்யின் கோட் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என வெங்கட் பிரபு தரப்பினர் உறுதியாக கூறி வருகின்றனர். விஜய்யும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து தரமான ஒரு படத்தை கொடுப்பார்கள் எனவும், இது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மீனாட்சி செளத்ரியும் நடிக்கின்றனர். அவர்களுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, இவானா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். யுவன் இசையில் பாடல்கள் ரெடியாகிவிட்டதாகவும், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X