GOAT: “என்ன ஆனாலும் நானே ரிஸ்க் எடுக்குறேன்..” GOAT படப்பிடிப்பில் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: விஜய் தற்போது GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எடுத்த அதிரடி முடிவு பற்றி தற்போது தெரியவந்துள்ளது.

விஜய் எடுத்த அதிரடி முடிவு
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகும் GOAT, விஜய் கேரியரில் இதுவரை இப்படியொரு தரமான படம் வந்தது கிடையாது என ரசிகர்களால் கொண்டாடப்படும் என கோலிவுட் வட்டாரமே கிசுகிசுத்து வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 GOAT: Vijay acted in action sequences without doop in the GOAT shooting

விஜய்யுடன் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது. இந்நிலையில், GOAT படத்தின் கதை குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகின்றன. இதுவும் சிம்புவின் மாநாடு போல சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் டைம் லூப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அதேநேரம், GOAT விஜய் ஸ்டைல் படமாக பக்கா கமர்சியலாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல் எமோஷனலாகவும் GOAT ரசிகர்களிடம் கனெக்ட் ஆகும் என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், GOAT எந்த ஜானர் படமாக இருந்தாலும் ஆக்‌ஷனில் மட்டும் கொஞ்சம் கூட குறையே இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இதனை GOAT பட ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனே கூறியுள்ளார்.

இதுவரை GOAT படத்திற்காக மொத்தம் 5 ஆக்‌ஷன் காட்சிகளை ஷூட் செய்து முடித்துவிட்டார் வெங்கட் பிரபு. இந்த ஆக்‌ஷன் காட்சிகளை திலீப் சுப்பராயன் தான் டைரக்ட் செய்துள்ளார். இதுதவிர இன்னும் 3 அல்லது 4 சண்டைக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். முன்னதாக தாய்லாந்தில் கார் சேஸிங் ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதில் மட்டும் இல்லாமல் GOAT படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஜய் டூப் போட மறுத்துவிட்டாராம்.

சில ஹை-ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளலாம் என எவ்வளவு சொல்லியும் விஜய் அதற்கு நோ சொல்லிவிட்டதாக திலீப் சுப்பராயன் கூறியுள்ளார். இதனால் சில காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடிக்கும் போது படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம். மேலும், விஜய்யின் இந்த ஆக்‌ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் தரமான விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X