கோட் இல்லை லூட்.. அட்லீக்கே அண்ணன் வெங்கட் பிரபு.. அந்த சினேகா சீனும் ஹாலிவுட் பட காப்பியா?

சென்னை: ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கிறோம் என சொல்லி விட்டு ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டும் இன்ஸ்பயர் ஆகி ஹாலிவுட் படங்களையே பட்டி டிக்கெரிங் பார்த்து தான் தொடர்ந்து விஜய்யின் படங்கள் உருவாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மாநாடு படத்தையே சில ஹாலிவுட் படங்களில் இருந்து சுட்டு எடுத்த வெங்கட் பிரபு விஜய்யின் 400 கோடி பட்ஜெட் கோட் படத்தையும் பல ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை ஒவ்வொன்றாக உருவி எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் தொடர்ந்து ஆதாரங்களை அடுக்கி அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

goat vijay copycat

இதெல்லாம் விஜய்க்கு தெரிந்து நடக்கிறதா? அல்லது தெரியாமல் அவரையே இயக்குநர்கள் ஏமாற்றி வருகிறார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அட்லீ முதல் வெங்கட் பிரபு வரை: முன்பெல்லாம் மகேஷ் பாபுவின் படங்கள், மலையாள படங்களை ரீமேக் செய்து நடித்து வந்தார் நடிகர் விஜய். ஆனால், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரது படங்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு போட்டிப் போடும் அளவுக்கு குவாலிட்டியாக மாறியுள்ளன. விஜய்யின் மார்க்கெட்டும் உலகளவில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பிகில் படத்தில் பல படங்களில் இருந்து காட்சிகளை வைத்து அட்லீ உருட்டியது அப்பட்டமாக தெரிந்த நிலையில், தற்போது அதே வேலையைத் தான் வெங்கட் பிரபுவும் கோட் படத்தில் பார்த்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

கோட் இல்லை லூட்: கோட் படத்தின் கிளைமேக்ஸ் ஸ்டேடியம் பைக் சேஸிங் சீன் முதல் கிளைமேக்ஸில் உனக்கு பிடிச்ச ஹீரோ யாருன்னு சொல்லி மகளை காப்பாற்றி விட்டு க்ளோன் விஜய்யை சுட்டு வீழ்த்தும் காட்சி என அனைத்துமே ஏற்கனவே ஹாலிவுட் படத்திலிருந்து அப்படியே லூட் அடிக்கப்பட்ட கோட் சீன் என்பதை நெட்டிசன்கள் வெளிச்சம் போட்டு வெளுத்து வாங்கினர். இந்நிலையில், ஆரம்பத்தில் விஜய் மற்றும் சினேகா தாய்லாந்து போகும் காட்சியும் அப்படியே ஒரு ஹாலிவுட் சீரிஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தற்போது அந்த காட்சிகளை ஷேர் செய்து வெங்கட் பிரபுவை விளாசி வருகின்றனர்.

400 கோடி பட்ஜெட்டில் மோசடி?: ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் தளபதி விஜய் வெங்கட் பிரபுவை நம்பி தரமான படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்த்தால் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு படத்திலிருந்தும் வெப்சீரிஸ்களிலிருந்தும் திருடியா எடுக்க வேண்டும் என வெங்கட் பிரபுவை நெட்டிசன்கள் கேள்விகளால் தொலைத்து வருகின்றனர். இதுவே அட்லீ செய்திருந்தால் அவரை பயங்கரமாக ட்ரோல் செய்திருப்பார்கள் என்றும் வெங்கட் பிரபு செய்திருப்பதால் பெரிதாக தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.

ட்ரூ லைஸ்: படத்தின் கதையை ஜெமினி மேன் மற்றும் விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தில் இருந்து அப்படியே உருவிய வெங்கட் பிரபு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை கூட ட்ரூ லைஸ் எனும் வெப்சீரிஸில் இருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்து தான் வைத்துள்ளார் என வறுத்தெடுத்துள்ளனர். தனது மனைவியை வெளிநாட்டுக்கு சுற்றுலா கொண்டு செல்வது போல ட்ரூ லைஸ் எனும் டிவி தொடரில் இடம்பெறும் காட்சிகளை அப்படியே விஜய் மற்றும் சினேகா குடும்பத்துடன் தாய்லாந்து செல்லும் காட்சியாக மாற்றியமைத்துள்ளார் வெங்கட் பிரபு என்றும் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் விஜய்யை திட்டுவது போல அங்கேயும் நண்பன் ஒருவன் மனைவியை யாராவது மிஷனுக்கு கூட்டிட்டுப் போவாங்களான்னு திட்டும் காட்சியும் அப்படியே உள்ளது என்கின்றனர்.

தளபதி 69 எப்படி இருக்குமோ?: லியோ படமே ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள தளபதி 69 படத்தில் எத்தனை ஹாலிவுட் படங்களின் காட்சிகள் இடம்பெறப்போகுதோ தெரியவில்லையே என இப்பவே கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X