GOAT: விஜய் காட்டிய அவசரம்... நெருப்பாக மாறிய வெங்கட் பிரபு... முடிவுக்கு வரும் GOAT ஷூட்டிங்!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதனால் சினிமாவில் இருந்து விலகவும் அவர் முடிவெடுத்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தளபதி 69ல் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதிக்கட்டத்தில் GOAT ஷூட்டிங்: விஜய்யின் 68வது படமான GOAT வேகமாக உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவது அனைவரும் அறிந்ததே. அதேபோல், விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்திலிருந்து விரைவில் யுவன் இசையில் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 GOAT: Vijay The Greastest Of All Time Movie Shoot Is Happening In Tambaram

லியோ ரிலீஸுக்கு முன்பே கோட் ஷூட்டிங் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதே விஜய் தனது அரசியல் பயணம் பற்றி வெங்கட் பிரபுவிடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லிவிட்டார் என்றே தெரிகிறது. அதனால் முதல் நாளில் இருந்து அசுர வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு. சென்னை, தாய்லாந்து, துருக்கி என அடுத்தடுத்து வேகமாக நடைபெற்று வருகிறது கோட் ஷூட்டிங்.

இந்த வரிசையில் கோட் ஷூட்டிங் தற்போது சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யின் போர்ஷன் ஷூட் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஷெட்யூல் மட்டுமே மிச்சம் இருப்பதாகவும், அதுவும் அடுத்தடுத்து நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி, மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கோட் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் தளபதி 69 அப்டேட்டை வெளியிட விஜய் முடிவு செய்துள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவுள்ளது வெற்றிமாறனா அல்லது த்ரி விக்ரமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதேபோல், அட்லீயின் பெயரும் தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோட் படத்தை விஜய் என்ஜாய் செய்து நடித்து வருவதாக நடிகர் வைபவ் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஆக்‌ஷன் மூவியாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை படக்குழு தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X