GOAT: விஜய்யின் GOAT ஸ்குவாடில் இணைந்த கேப்டன்... AI டெக்னாலஜியில் விஜயகாந்த் லுக் இதுவா..?
சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளனர். ஏஐ டெக்னாலஜியில் விஜயகாந்தின் போர்ஷன் ஷூட் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ லுக் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய்யின் GOAT ஸ்குவாடில் இணைந்த கேப்டன்: விஜய்யின் 68வது படமான GOAT ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. அதேபோல் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கும் மல்டி ஸ்டார்ஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஆக்ஷன் மூவியாக உருவாகும் கோட் படத்தில் ஏராளமான சர்ப்ரைஸ்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு சர்ப்ரைஸ்ஸாக கேப்டன் விஜயகாந்தும் இதில் நடித்துள்ளாராம். கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த், அரசியலிலும் கெத்து காட்டி வந்தார். இந்நிலையில் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பரில் உயிரிழந்தார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னரும் கூட கேப்டன் நினைவிடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தி கோட் படத்தில் நடிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட சீன்களில் விஜயகாந்தின் மாஸ் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் கேமியோவாக நடித்துக் கொடுத்தவர் கேப்டன். தற்போது விஜய் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் போதும் கூட விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி வழியாக மீண்டும் நடித்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் விஜயகாந்தின் கேரக்டர் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தின் கெட்டப் எப்படி இருக்கும் என ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக கோட் படத்தில் இருந்து சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் ராணுவ உடையில் மெஷின் கன் வைத்து மிரட்டலாக போஸ் கொடுத்திருந்தனர். அதில் கேப்டன் விஜயகாந்தும் இருப்பதாக ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.
இது ஃபேன்மேட் போஸ்டராக இருந்தாலும் விஜய்யின் கோட் ஸ்குவாடில் விஜயகாந்த் இணைந்தால் இப்படி தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஃபேன்மேட் போஸ்டர், படக்குழுவினருக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











