GOAT: என்னய்யா பெரிய விஜய்..? அஜித் வெர்ஷனில் அசரடிக்கும் GOAT போஸ்டர்... இது வேற லெவல் மாஸ்!
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தில் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று மாலை வெளியானது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், அதாவது GOAT என்ற டைட்டிலில் இந்தப் படம் உருவாகி வருகிறது. டைட்டிலுடன் விஜய்யின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், GOAT டைட்டிலில் அஜித் வெர்ஷன் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
அஜித் வெர்ஷனில் GOAT
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, The Greatest of All Time என்ற டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. The Greatest of All Time என்பதன் சுருக்கமாக GOAT என வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதன் மூலம் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

தளபதி 68 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. முக்கியமாக இதில் வெங்கட் பிரபுவின் டேக் லைனில் "A Venkat Prabhu Hero" என கேப்ஷன் கொடுத்துள்ளதும் அதிக ஹைப் கொடுத்துள்ளது. இந்நிலையில், GOAT போஸ்டரில் அஜித் வெர்ஷன் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருந்தது.
இந்நிலையில் தற்போது GOAT டைட்டில் போஸ்டரில் விஜய்யை விட அஜித் தான் செம்ம மாஸ் காட்டுவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த போஸ்டரில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் இரண்டு அஜித், இணைந்த கைகள் ஸ்டைலில் போஸ் கொடுப்பதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் GOAT பறந்து வர கார்ட்டூனிஸ்ட் ஸ்டைலில் அதகளமாக உருவாகியுள்ளது இந்த போஸ்டர்.
அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்படும் இந்தப் போஸ்டரை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். "கரி கடைல ஆட்ட கட்டி தொங்கவிட்ட மாதிரி AK-வ தொங்க விட்டுருக்கீங்க" என கமெண்ட்ஸ் பாஸ் செய்துள்ளனர். அஜித்துக்கு மங்காத்தா படத்தை ஹிட்டாக்கியதை போல, விஜய்க்கு GOAT இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக தளபதி 68 படத்தில் அஜித் கேமியோ ரோலில் நடிக்கலாம் என வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் கூறியிருந்தார்.

ஆனால், அது தற்போதைக்கு வாய்ப்பில்லை என வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஃபேன்மேட் போஸ்டராக வெளியான GOAT அஜித் வெர்ஷன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேநேரம் தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் வெளியானதைத் தொடர்ந்து, விரைவில் GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











