GOAT: விஜய்யுடன் மெர்சல் காட்டும் பிரசாந்த், பிரபுதேவா... இது தான் GOAT ஸ்குவாட்... சும்மா அள்ளுதே!

சென்னை: விஜய்யின் தளபதி 68, GOAT - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் GOAT படத்தில் இருந்து பொங்கல் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியின் வேட்டையன் போஸ்டருக்கே சவால் விட்டுள்ளது விஜய்யின் GOAT ஸ்குவாட்.

மெர்சல் காட்டும் விஜய்யின் GOAT ஸ்குவாட்
விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என ஹாலிவுட் ஸ்டைலில் டைட்டில் வைத்துள்ள வெங்கட் பிரபு, படத்தையும் அதேபோல் மிரட்டலாக இயக்கி வருகிறாராம். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இதில் விஜய்யும் இளையராஜாவும் இணைந்து ஒரு பாடலும் பாடியுள்ளனர்.

 GOAT: Vijays GOAT special poster released for Pongal

அதைவிட முக்கியமாக GOAT படத்தில் விஜய்யுடன் பெரிய நட்சத்திரக் கூட்டணியே களமிறங்கியுள்ளது. 80களில் கோலிவுட்டை கலக்கிய சில்வர் ஜூப்ளி ஹீரோ மோகன் தான் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் GOAT படத்தில் நடித்து வருகின்றனர். இவர்களில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரின் கேரக்டர் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

விஜய் சினிமாவில் அறிமுகமான போது உச்சத்தில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக ஃபீல்ட் அவுட்டாகி நடிக்காமல் இருந்தார். அவர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. முக்கியமாக அவரும் விஜய்க்கு வில்லனாக நடிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பொங்கல் ஸ்பெஷலாக வெளியான GOAT போஸ்டர், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது.

நியூ இயர் ஸ்பெஷலாக விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகின. இப்போது பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக GOAT படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான போஸ்டரை இறக்கியுள்ளது படக்குழு. அதில், விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் மெஷின் கன் உடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளனர். 'Meet The GOAT squad' என்ற கேப்ஷனுடன் வெளியான இந்தப் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் சிரித்தபடி கெத்து காட்டியுள்ளனர்.

இதனால், GOAT படத்தில் இந்த நால்வருமே நண்பர்களாக நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மங்காத்தா படத்தில் பணம் கொள்ளையடிக்க திட்டம்போடும் நான்கு பேருடன் அஜித்தும் ஐந்தாவதாக இணைவார். இங்கே GOAT படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நான்கு பேரும் ஒரு கூட்டணியாகவே நடித்துள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் GOAT செம்ம மாஜாவான மூவியாக இருக்கும் விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

முன்னதாக GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலானது. அதேபோல், சில வீடியோக்களும் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ரஜினியின் வேட்டையன் போஸ்டரை விட விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் போஸ்டர் தான் மாஸ் காட்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X