மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடிகர் விஜயின் ஸ்குவாடில் முக்கியமான நபராக நடித்து வரும் அஜ்மல் கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் 'கோட்' படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா என மூன்று 50 + நடிகர்களுடன் 40ஐ நெருங்கும் நடிகர் ஆனால் அஜ்மல் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடலில் கடைசியாக இது நடனமாட வர விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா அங்கிருந்து விலகி செல்லும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளன.

GOAT will more than Mankatha Actor Ajmal reveals in an event

நடிகர் அஜ்மல் எப்போதும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தில் அவர்தான் அந்த கருப்பு ஆடா? என்கிற கேள்விகளையும் தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அஞ்சாதே, கோ எல்லம் மறக்க முடியுமா?: பரத் நடித்து வெளியான பிப்ரவரி 14 படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அஜ்மல் 2007 ஆம் ஆண்டு வெளியான பிரணய காலம் எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் பிரசன்னா நடித்து வெளியான அஞ்சாதே படத்தில் நடித்து மிரட்டினார். திரு திரு துரு துரு, கோ, மாற்றான், வெற்றிசெல்வன், சித்திரம் பேசுதடி 2, நெற்றிக்கண், மங்கல வாரம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் அஞ்சாதே மற்றும் கோ படங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தன. பொதுவாகவே இவர் படங்களில் நெகட்டிவ் ஷேடு கலந்து தான் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தாவை விட மிரட்டும்: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் அஜித் மற்றும் அவரது டீம் தரமான சம்பவம் செய்திருக்கும். பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின் என அந்த டீமில் உள்ள அனைவருக்கும் பெரிய முக்கியத்துவத்தை வெங்கட் பிரபு கொடுத்திருப்பார். அதை விட சிறப்பாக கோட் படத்தில் தளபதி விஜய்யின் ஸ்குவாட் இருக்கும் என்றும் இதிலும், அந்த அளவுக்கு சம்பவத்தை வெங்கட் பிரபு செய்து இருக்கிறார் என அஜ்மல் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

கருப்பு ஆடு: படத்துக்கே கோட் என டைட்டில் வைத்துள்ள வெங்கட் பிரபு நிச்சயம் கருப்பு ஆடு ஒன்றை படத்தில் வைத்திருப்பார். அந்த கருப்பு ஆடே அஜ்மலாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விசில் போடு பாடலில் கூட இவர் ஆடும் போது மற்ற நடிகர்கள் கண்டுக்காமல் விட்டு அசிங்கப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் என யார் மெயின் வில்லனாக இருக்கப் போகின்றனர் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிச்சயம் அஜ்மலுக்கு கோ படத்திற்கு பிறகு தரமான கம்பேக் படமாக கோட் இருக்கும் என அவரும் உறுதியாக நம்பி காத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி எப்படியும் அந்த சீக்ரெட் அம்பலமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X