நடிகை ரியா சக்கரவர்த்தி கைது.. கடவுள் நம்முடன் இருக்கிறார் என சுஷாந்த் சிங்கின் சகோதரி ட்வீட்!
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
அவரது கைதை தொடர்ந்து #RheaArrested ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என ட்வீட் போட்டுள்ளார்.

3 நாள் விசாரணை
போதைப்பொருள் தடுப்பு போலீசார் தொடர்ந்து 3 நாட்களாக நடிகை ரியா சக்கரவர்த்தியை நோண்டி நொங்கெடுத்ததில், தானும் போதைப் பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளேன் என்பதை நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரியா கைது
நடிகை ரியா சக்கரவர்த்தியின் ஒப்புதல் வாக்குமூலத்தை தொடர்ந்து இன்று அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கண்டு கொள்ளாத பிரபலங்கள்
நடிகை ரியா சக்கரவர்த்தியை மீடியாக்கள் வேட்டையாடும் கழுகுகளை போல மொய்த்து எடுத்ததை சில பிரபலங்களே முன் வந்து விமர்சித்து இருந்தனர். இந்நிலையில், போதைப் பொருள் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு பிரபலமும் ரியா சக்கரவர்த்திக்கு ஆறுதலாக குரல் கொடுக்கவில்லை. குரல் கொடுத்த சிலரும் காணாமல் போய்விட்டனர்.

கடவுள் நம்முடன் இருக்கிறார்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரிகளுக்கு எதிராக மும்பை போலீசாரிடம் நடிகை ரியா சக்கரவர்த்தி அண்மையில் புதிய வழக்கு ஒன்றை தொடுத்து இருந்தார். அதனை அவசர அவசரமாக பதிவு செய்தனர். இந்நிலையில், நடிகை ரியா கைது செய்யப்பட்டதை அடுத்து, #GodIsWithUs என சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி ட்வீட் போட்டுள்ளார்.

சிக்குமா பாலிவுட் மாஃபிய
நடிகை ரியா சக்கரவர்த்தியை பாலிவுட் மாஃபியா தான் ஆட்டி வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் உரக்க சொல்லி வருகின்றனர். அதனால், பாலிவுட் மற்றும் மகாராஷ்ட்ரா அரசிடம் இருந்து அவர்களுக்கு ஆபத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியாவின் கைதை தொடர்ந்து பாலிவுட்டில் மேலும் சில பெரும் புள்ளிகள் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











