இசை 'ஆண்மை' கடவுளுக்கு இன்று பிறந்தநாள்: வாங்க வாழ்த்தலாம் #HBDilaiyaraaja

By Siva

சென்னை:இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

மண் வாசனை கமழும் இசையை அளித்து ரசிகர்களை கிறங்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. அத்தகைய ஜாம்பவான் இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தினமும் இசையோடு வாழ்வதாலோ என்னவோ இசைஞானிக்கு வயது ஏறிக் கொண்டே போனாலும் இளமையாகவே உள்ளார்.

இளையராஜா

இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #HBDilaiyaraaja #Ilaiyaraja #Ilayaraja ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி இசைஞானியை ரசிகர்கள் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி

கவலையாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி நம்மில் பலர் தேடுவது இளையராஜா பாடல்களை தான். அவரின் பாடல்களை கேட்டால் மனம் சரியாகி அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். ஊர், உலகத்தையே தனது இசையால் மகிழ வைக்கும் அந்த மகராசன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

இசைஞானி

உங்களில் யார் அடுத்த இளையராஜா என்று மட்டும் எப்பொழுதுமே கேட்க முடியாது. காரணம் இளையராஜாவுக்கு இணை இளையராஜா தான். அவர் இசையை கேட்டு இன்ஸ்பையர் ஆகி இசையமைக்கலாம். ஆனால் அவரை போன்றே அந்த தேனிசையை கொடுப்பது கஷ்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்மையில்லாத்தனம்

ராயல்டி பிரச்சனையால் இளையராஜா விமர்சனத்திற்குள்ளானார். மேலும் பிற இசையமைப்பாளர்கள் தனது பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று அவர் கூறியது பலருக்கும் பிடிக்கவில்லை. அவருக்கு தலைக்கனம், திமிர் என்கிறார்கள். திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருப்பதில் தவறு இல்லை. இசைஞானிக்கு கொஞ்சம் திமிர் அழகு தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

எஸ்.பி.பி

ராயல்டி பிரச்சனையால் பிரிந்திருந்த இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருவரும் சேர்ந்து மேடைகளை அலங்கரிக்கப் போவது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களை திரும்பத் திரும்ப கேட்பதே ஒரு தனி சுகம். இளையராஜாவின் பாடல்களை கேட்டால் தான் பலருக்கு இரவில் தூக்கமே வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X