காளியாத்தா கூட கருப்புத்தான்.. நிறத்தை வைத்து கிண்டல் செய்தவர்களை வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்!

மும்பை: "கருப்பாக இருக்க", "அழகா இல்லை" என கிண்டல் செய்த நெட்டிசன்களை நாம கும்பிடுற காளியாத்தா கூட கருப்புத்தான் என வெளுத்து வாங்கியுள்ளார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான்.

பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளை ட்ரோல் செய்யவே தனியாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது.

கரீனா கபூரின் குழந்தை தைமூரையே விட்டு வைக்காத இந்த விஷமிகள் வாலிப பருவத்தில் இருக்கும் ஷாருக்கான் மகளை விட்டு விடுவார்களா என்ன?

ஷாருக்கான் மகள்

ஷாருக்கான் மகள்

பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கு 20 வயது ஆகி விட்டது. மாடலிங் துறையில் கலக்கி வரும் சுஹானா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ஒரு மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

நிறத்தை வைத்து கிண்டல்

நிறத்தை வைத்து கிண்டல்

ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பதிவிடும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், அவரது நிறம் டார்க்காக இருப்பதாகவும் கருப்பாக இருப்பதாகவும் கூறி கிண்டல் செய்துள்ளனர். ட்ரோல்களை கண்டு கொள்ளாமல் இருந்து வந்த சுஹானா கான், தற்போது சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.

ஏகப்பட்ட பிரச்சனைகள்

ஏகப்பட்ட பிரச்சனைகள்

பாலிவுட்டில் இப்போ ஏகப்பட்ட பிரச்சனைகள் போய்க்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு நான் கருப்பாக இருப்பது தான் இப்போ முக்கியமா என்று கூறிய அவர், இதையும் சரி செய்து தான் ஆக வேண்டும் என தனது சரியான பதிலடி பதிவை போட்டுள்ளார். 12 வயது குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே எனது நிறத்தை இப்படி கிண்டல் செய்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காளியாத்தா

காளியாத்தா

இந்தியில் கருப்பு என்றால் காலா என அர்த்தம். நாம கும்பிடுற காளியாத்தா கூட கருப்புத்தான். கருப்பு இந்தியாவின் நிறம், எங்க கிட்ட அதிகமா மெலனின் இருக்கு. இந்தியர்களே இப்படி சக இந்தியர்களை நிறத்தை வைத்து வேறுபாடு படுத்தி பார்த்தால் நன்றாகவா இருக்கிறது என வெளுத்து வாங்கி உள்ளார்.

நான் சந்தோஷமா இருக்கேன்

நான் சந்தோஷமா இருக்கேன்

5.7 அடி உயரமாகவும் வெள்ளையாகவும் இருந்தால் நீங்க அழகு கிடையாது. 5.3 உயரத்துடன் அடர் நிறத்தில் இருக்கும் நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் நீங்களும் சந்தோஷமா இருங்க என பதிவிட்டுள்ள சுஹானா #endcolourism என்றும் போட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்களும் சுஹானாவின் இந்த போல்டான பதிலடியை பாராட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X