GodFather Review: சிரஞ்சீவி, சல்மான் கானின் மாஸ் ரகளை.. காட்ஃபாதர் விமர்சனம் இதோ!

நடிகர்கள்: சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா

இசை: தமன்

இயக்கம்: மோகன் ராஜா

Rating:
3.0/5

ஹைதராபாத்: டோலிவுட் படங்களை தமிழில் ரீமேக் செய்து இயக்கி வந்த மோகன் ராஜா மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெற்றிப்பெற்ற லூசிஃபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியையும் சல்மான் கானையும் வைத்து ரீமேக் செய்துள்ள படம் தான் இந்த காட்ஃபாதர்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட படங்கள் இதே டைட்டிலில் வெளியாகி உள்ளன. லூசிஃபர் அளவுக்கு டைட்டிலில் வில்லங்கம் இல்லாமல் தெளிவாக மாஸ் படமாகவே காட்ஃபாதர் படத்தை மக்களுக்கு புரிய வைக்கிறது.

சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா நடிப்பில் வெளியான காட்ஃபாதர் திரைப்படம் எப்படி இருக்கு என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்..

கதை என்ன

கதை என்ன

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தை பார்த்த பலருக்கும் கதை என்ன என்பது தெரியும். பார்க்காதவர்களுக்காக காட்ஃபாதர் கதையை இங்கே சுருக்குமாக சொல்கிறேன்.. ஆந்திர முதல்வர் பி.கே.ஆர் மரணத்திற்கு பிறகு அங்கு நடைபெறும் உட்கட்சி பூசல், அடுத்த முதல்வர் யார் என்கிற சண்டை? எதிர்க்கட்சியினர் ஆட்சியை கவிழ்க்க போடும் சதித்திட்டம், உள்ளுக்குள்ளே இருந்து விளையாடும் விஷப் பாம்பு வில்லன் என பல பிரச்சனைகளை வளர்ப்பு மகன் என சொல்லப்படும் பிரம்மா (சிரஞ்சீவி) எப்படி சமாளித்து, ஆட்சியில் யாரை அமர்த்துகிறார் என்பது தான் காட்ஃபாதர் படத்தின் கதை.

மெகா மாஸ்

மெகா மாஸ்

மெகா ஸ்டார் என டோலிவுட் ரசிகர்கள் பல ஆண்டுகளாக சிரஞ்சீவியை கொண்டாடி வரும் நிலையில், காட்ஃபாதர் படத்தின் மூலம் மெகா மாஸ் காட்டியுள்ளார் சிரஞ்சீவி. மகன் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஆச்சார்ய படம் சொதப்பிய நிலையில், சூர் ஷாட் பிளாக்பஸ்டர் அடிக்க வேண்டும் என்றே இந்த படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளார். வசூல் ரீதியாக அவரது கெஸ்ஸிங் மிஸ் ஆகவில்லை என்றே தெரிகிறது.

மெச்சூரிட்டியான நடிப்பு

மெச்சூரிட்டியான நடிப்பு

காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. சத்யப்பிரியா எனும் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த முதல்வர் பி.கே.ஆரின் மகளான சத்யப்பிரியாவின் கணவர் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யப்பிரியா சிக்கலில் இருக்கும் போது பிரம்மா காப்பாற்றும் காட்சிகள், இருவருக்கும் இடையே உள்ள உறவு என மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

மாஸ் ரகளை

மாஸ் ரகளை

லூசிஃபர் படத்தை இயக்கிய பிருத்விராஜ் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார் என்றதுமே படத்திற்கான ஹைப் எகிறியது. திரையிலும் வாண்டட் நடிகர் சல்மான் கான் துப்பாக்கியுடன் களமிறங்கியதும் தியேட்டரில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானின் மாஸ் ரகளை அரங்கேறுகிறது.

பிளஸ்

பிளஸ்

இயக்குநர் மோகன் ராஜா மலையாள லூசிஃபர் படம் போல ஸ்லோவாக கொண்டு செல்லாமல் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஸ்பீடு கொடுத்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதற்கேற்ப காட்சிகளுக்கு தமன் பிஜிஎம் போட்டே பில்டப் ஏற்றுகிறார். தனி ஒருவன் படத்தில் எனக்கு டீல் பேச புடிக்கும் என அட்டகாசமான வசனங்கள் இடம்பெற்றிருப்பதை போலவே "என்னால் அரசியலில் இருந்து விலகி நிற்க முடியாது' என சிரஞ்சீவி சொல்லும் இடங்களில் எல்லாம் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.

மைனஸ்

மைனஸ்

லூசிஃபர் படத்தை பார்த்தவர்களுக்கு படத்தில் இருக்கும் ட்விஸ்ட்டுகள் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகாது என்பது தெரியும். ஆனால், படத்தை பார்க்காதவர்களுக்கும் கதையில் இருக்கும் ட்விஸ்ட் காட்சிகள் கெஸ் செய்யும் விதமாகவே உருவாக்கி இருப்பது ஏமாற்றத்தை அளித்து உள்ளது. பிஜிஎம்மில் தமன் மிரட்டினாலும், பாடல்களில் கோட்டை விட்டு விட்டார். மொத்தத்தில் மெகா ஸ்டார் ரசிகர்களை நல்லாவே திருப்திப்படுத்தும் இந்த காட்ஃபாதர் மற்ற ரசிகர்களையும் திருப்தி படுத்துமா? என்பது கேள்விக் குறி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X