twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெட்ட கெட்ட வார்த்தையில திட்றாங்க.. மிரட்டுறாங்க.. ஆபத்தை தடுக்கணும்.. பதறும் காட்மேன் படக்குழு!

    |

    சென்னை: காட்மேன் வெப்சீரிஸ் முற்றிலுமாக தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக் குறியாகிவிடும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    Recommended Video

    Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

    ஜீ5 நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படும் வெப் சீரிஸ் காட்மேன். இதில் டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்தத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது.

    காட்மேன் மட்டுமல்ல.. அந்த மாதிரி காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸ்.. வைரலாகும் சீன்ஸ்! காட்மேன் மட்டுமல்ல.. அந்த மாதிரி காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸ்.. வைரலாகும் சீன்ஸ்!

    ஆபாசக் காட்சிகள்

    ஆபாசக் காட்சிகள்

    இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் வசனங்களும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதனால் வந்த வேகத்திலேயே இந்த வெப்சீரிஸ்க்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த டீசர் யூட்யூபில் இருந்து நீக்கப்பட்டது.

    போலீஸில் புகார்

    போலீஸில் புகார்

    இருப்பினும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றதால் இந்த வெப்சீரிஸை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதேநேரத்தில் இந்த வெப் சீரிஸ் தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் போலீஸில் புகார் அளித்தனர்.

    படக்குழு எதிர்ப்பு

    படக்குழு எதிர்ப்பு

    இதனை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் காட்மேன் வெப்சீரிஸ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் காட்மேன் வெப்சீரிஸ்க்கு தடை விதிக்க படக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஆர்மி போல்

    ஆர்மி போல்

    இதுதொடர்பாக படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜீ5 நிறுவனம் ஜூன் 1ஆம் தேதி காட்மேன் வெப் சீரிஸை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்த முடிவுக்கான காரணத்தை வெளியிடுகிறோம். தமிழத்தில் உள்ள பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள், ஒரு ஆர்மியை போல் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கேவலமாக திட்டுகிறார்கள்

    கேவலமாக திட்டுகிறார்கள்

    சென்னையிலும் பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 380 நிமிடங்கள் கொண்ட வெப்சீரிஸில் வெறும் ஒரு நிமிட டீஸரை பார்த்து பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த புகார்களை அளித்துள்ளனர். மேலும் இந்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை உலகின் பல பகுதிகளில் இருந்தும் பிராமண மக்கள் கடந்த 4, 5 நாட்களாக இரவு பகலாக போனில் கேவலமான வார்த்தைகளில் திட்டி வருகின்றனர்.

    தவறான தகவல்

    தவறான தகவல்

    மேலும் காட்மேன் வெப் சீரிஸின் தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்டியன், அதனால் தான் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் இப்படி ஒரு வெப்சீரிஸை எடுத்துள்ளார் என்ற வதந்திகளும் பரவி வருகிறது. மேலும் அவர் கோவையில் உள்ள கோவிலில் பன்றி இறைச்சியை வீசியதாகவும் ஒரு தவறான பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    உரிமையை பறிக்கிறது

    உரிமையை பறிக்கிறது

    மத்தியில் அதிகாரம் செலுத்தும் சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவாளர்கள் சிலர் ஜீ5 நிர்வாகிகளை, இந்த வெப் சீரிஸை நிறுத்துமாறு மிரட்டியுள்ளனர். அந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்களின் உண்மை தன்மை, சீரிஸின் கதை என்பது பற்றி புரிதல் இல்லாமல், இது பிராமண சமூகத்திற்கு எதிரானது எனக்கூறி தடைக்கோருவது கருத்துச் சுதந்திர உரிமையை முற்றிலுமாகப் பறிக்கிறது.

    கேள்விக் குறியாகிவிடும்

    கேள்விக் குறியாகிவிடும்

    இது ஒரு பயங்கரவாத செயல், காட்மேன் சீரிஸ் தடைசெய்யப்படுமேயானால் படைப்பு சுதந்திரம் கேள்விக்குறியாகிவிடும். ஒரு வேளை காட் மேன் சீரிஸுக்கு தடை விதிக்கப்பட்டால் இனி யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வரும் முன் தடுத்து நிறுத்திவிடலாம் என்னும் நிலை ஏற்படும்.

    ஆபத்தை தடுக்க வேண்டும்

    ஆபத்தை தடுக்க வேண்டும்

    படைப்பு சுதந்திரத்திற்கு எழும் ஆபத்தை திரையுலகத்தினர் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும். எனவே அதனை தடுக்க இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமரின் அலுவலகத்துக்கும் தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு 'காட்மேன்' வெப்சீரீஸ் தனியார் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கான கோரிக்கையை கொண்டு செல்லப்படும். இவ்வாறு வெப் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more about: godman காட்மேன்
    English summary
    Godman webseries team gives statement about controversy. Team also says the godman web series is canceled then the creative freedom would be the question mark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X