பிராமணாள் மட்டும் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்த்திரம் சொல்லி இருக்கு..சர்ச்சையை கிளப்பும் காட்மேன்

சென்னை : என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்காணுங்க, இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கணும்னு நான் காட்ட போறேன் என்ற சர்ச்சைக்குரிய வசனங்களுடன் வெளியானது காட்மேன் வெப்சீரியல் டீசர்.

Recommended Video

Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் முறைக்கு ஒவ்வொன்றாக மாறி வருகிறது அதில் இப்போது திரைதுறையும் ஒன்று.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வெப்சீரியல் என்ற ஒன்று தலையோங்கி வருகிறது. இந்நிலையில் இந்த தொழில்நுட்பம் பரவலாக பல்வேறு மொழிகளிலும் ஊடுருவி மேலும் பல நல்ல கலைஞர்களை உருவாக்கி வருகிறது.

மாற்றம்

மாற்றம்

தமிழில் பல வெப்சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன, இதில் இந்தியாவை பொறுத்தவரை நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 போன்ற மிக பிரபலமான டிஜிட்டல் தளங்களும், சில புதிய தளங்களும் வெப்சீரியஸ்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் தற்போது இவைகள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. பல நல்ல கதைகளை கையில் வைத்துக்கொண்டு வாய்ப்புக்காக அலைந்த பல இயக்குனர்களுக்கு இவை வரப்பிரசாதமாக உள்ளது.

 புதிய வாய்ப்புகள்

புதிய வாய்ப்புகள்

இயக்குனர்களும் தங்களின் படைப்பை இது போன்று வெப்சீரியஸ்களாக எடுத்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது காட்மேன் என்ற வெப்சீரியஸின் டீசர் சர்ச்சைக்குரிய பல வசனங்களுடன் வெளியாகி உள்ளது. இதில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல முகங்கள் நடித்துள்ளனர், நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் போன்றோர் நடித்துள்ளனர். இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இளங்கோ ரகுபதி மற்றும் பெதர்ஸ் இதனை தயாரித்துள்ளனர்.

 சர்ச்சைக்குரிய வசனங்கள்

சர்ச்சைக்குரிய வசனங்கள்

டீசர் தொடங்கும் போதே "பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு" என்று தொடங்கும் இந்த டீசர், காவி உடையில் சாமியாராக வரும் ஜெயபிரகாஷ் "என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்காணுங்க". என்ற வசனம் அனல் தெறிக்கிறது. மேலும், "நீ வேதம் படிக்கணும் அய்யனார்" இந்த ஒரு வசனம், "இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன்"ஒரு சிறந்த பிராமணனாக உருவாக்க முயற்சியெடுப்பர்.

 இன்னொரு பக்கம் புட்டி

இன்னொரு பக்கம் புட்டி

ஆனால் டேனியல் பாலாஜியோ ஒரு பக்கம் குட்டி இன்னொரு பக்கம் புட்டி என உலகத்தில் உள்ள எல்லா தவறான செயல்களையும் செய்து கொண்டிருக்கும் ஒருவராக இருக்கிறார். டீசரின் முடிவில் டேனியல் பாலாஜி மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்தும் போது "நீ பிராமணன் ஆக போறியா" என நக்கலாக சிரிக்கிறார் அவரது நண்பர். இவ்வாறு அனல் பறக்கும் வசனங்களுடன் வெளியான இந்த வெப் தொடர் வருகிற ஜூன் 12ம் தேதி ஜீ5-ல் வெளியிடப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X